|
|
வாடிநிழல்
போலுனுள மேவிஅணி தேர்மிசையும்
ஆகி வருவோன்
நாடிஅற நாளும்உயர் கோசலம் தானகுல
நாடன் இவனே. |
(இ
- ள்.) வாடி விழும் நூலும் இரு மால் வரையும் நேர் இடையும்
மாமுலையுமாய்ச் சூடி - மெலிந்து விழும் நூலினையும் இரண்டு பெரு
மலைகளையும் முறையே சிறிய இடையும் திரண்ட பெரிய தனங்களும்
ஆக மேற்கொண்டு, வான் மிக இழிய - வானுலகத்திலுள்ள தேவர்களும்
உன் அழகு கண்டு மிகவும் இறங்கி வரும்படி, ஞாலம் விளையாடி வரு
தோகை மயிலே - பூமியில் விளையாடி வருகின்ற தோகையுடைய
மயிலன்ன சாயலுடைய சந்திரமதியே!, ஆடி நிழல் போல் உன் உளம்
மேவி - கண்ணாடியில் தோன்றும் உருவம்போல உன் மனத்தில் பொருந்தி,
அணி தேர் மிசையும் - அழகிய தேரின் மேலும், ஆகி வருவோன் -
தோன்றி வருகின்ற இவ்வரசன், அறம் நாடி நாளும் உயர் - தருமமானது
நாள்தோறும் தேடிப் பொருந்தி உயர்வடைகின்ற, கோசலம தான -
கோசலம் என்ற, குல நாடன் இவனே - சிறந்த நாட்டினியுடையவன்
இவனே.
தேர் மிசையும் : இறந்தது தழீஇய எச்ச உம்மை. மாமுலை :
உரிச்சொற்றொடர். தோகை மயில் : இரண்டன் உருபும் பயனும்
உடன்தொக்கதொகை. ஒரு நூலும் இரு மலையும் இடையும் முலையுமாகத்
தன்மேற்கொண்டு பூமியில் விளையாடி வருகின்ற தோகை மயில்
போன்றவள் எனச் சந்திரமதியைச் சிறப்பித்தாள் தோழி எனக் கொள்க.
வான் இழிய என்றது வானுலகத்தாரும் இறங்கி வந்து காணும்படி வரு
மயில் என்று மயிலைச் சிறப்பித்தது.
(234)
| |
சந்திரமதி
கழுத்தை நீட்டி எட்டிப் பார்த்தல்
கலி விருத்தம் |
| 339. |
மந்தரம்
அனையதோள் வள்ளல் பேர்சொலச்
சுந்தரத் தோகைமார் தோளைத் தாழ்த்தியச்
சந்திர வதிஅரிச் சந்தி ரன்தனைக்
கந்தர நீட்டிஉள் கருத்து நோக்கினாள். |
(இ - ள்.)
மந்தரம் அனைய தோள் வள்ளல் பேர்சொல - மந்திர
மலைக்கு ஒப்பான தோளையுடைய வள்ளலாகிய அரிச்சந்திரனது பேரைச்
சொன்னவுடன், அச் சந்திரவதி - அந்தச் சந்திரமதியானவள், சுந்தரத்
தோகைமார் தோளைத் தாழ்த்தி - அழகிய தோகையுடைய மயில்போலும்
சாயலுடைய தோழிகளின் தோளைத் தாழ்த்திக் கொண்டு, அரிச்சந்திரன்
தனை - அரிச்சந்திரனை, கந்தரம் நீட்டி - கழுத்தை நீட்டிப் பார்த்து, உள்
கருத்தும் நோக்கினாள் - அவனுடைய உள்ளக்கருத்தையும் ஆய்ந்தாள்.
தோகை : உவமையாகுபெயராய்ப் பெண்களை உயர்த்தியது
மார் :
பலர்பாலைக் காட்டும் விகுதி.
(235)
|