|
| |
அரிச்சந்திரனும்
சந்திரமதியை நோக்கல் |
| 340. |
அங்கைவேன்
மன்னனும் ஆசை மீக்கொள
மங்கைதன் பங்கய வதனம் நோக்கினான்
செங்கயற் கண்ணினாள் திருக்க ழுத்தினில்
மங்கள நாணுறீஇ வயங்கக் கண்டனன். |
(இ
- ள்.) அம் கை வேல் மன்னனும் - அழகிய கையிலே வேலை
யேந்திய அரிச்சந்திர வேந்தனும், ஆசை மீக்கொள - சந்திரமதியின் மேல்
காதல் மிகக் கொண்டு, மங்கை தன் பங்கய வதனம் நோக்கினான் -
சந்திரமதியின் தாமரைமுகத்தைக் காதலோடு பார்த்தான், செங்கயல்
கண்ணினாள் திருக் கழுத்தினில் - சிவந்த கயல்போன்ற கண்களையுடைய
சந்திரமதியின் அழகிய கழுத்தில், மங்கள நாண் உறீஇ வயங்கக் கண்டான்
- திருமங்கல நாண் பொருந்தி விளங்குதல் கண்டான்.
பங்கய வதனம் : உவமைத்தொகை; கயல் கண்ணாள் என்பதும் அது.
செங்கயல் : பண்புத்தொகை. உறீஇ : சொல்லிசையளபெடை. கண்டனன் -
காண் : பகுதி, ட் : இறந்தகால இடைநிலை; அன் : சாரியை; அன் :
படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி. கழுத்தை உயர்த்தி நீட்டிச்
சந்திரமதி அரிச்சந்திரனை நோக்கியபோது அவன் மங்கல நாணைக்
கண்டான் என்க.
(236)
| |
சந்திரமதி
கழுத்தில் திருமங்கிலிய மிருக்கக் கண்டு
'திருமணஞ் செய்யலாமோ?' என அரிச்சந்திரன்
மாமனைக் கேட்டல்
|
| 341. |
கன்னிஎன்
றெண்ணினம் கன்னி யோஅலள்
முன்னரே மங்கலம் பூண்ட மொய்குழல்
இன்னமும் ஒருவருக் கெய்து மோஎனா
மன்னவன் மாதுலற் குரைவ ழங்கினான்.
|
(இ
- ள்.) கன்னி என்று எண்ணினம் - இவளைக் கன்னியென்று
கருதினோம், கன்னியோ அலள் - இவள் கன்னியாய் இல்லை, முன்னரே
மங்கலம் பூண்ட மொய் குழல் - இதற்கு முன்னமேயே திருமங்கிலியம்
தரித்த அடர்ந்த கூந்தலையுடைய பெண், இன்னமும் ஒருவருக்கு எய்துமோ
எனா - முதலிலேயே ஒருவருக்குத் திருமணம் செய்யப் பெற்றவள்
இன்னமும் ஒருவரை அடையமுடியுமோ என்று கருதி, மன்னவன்
மாதுலற்கு உரை வழங்கினான் - அரிச்சந்திர மன்னன் தன் மாமனான
சந்திரதயனைக் கேட்டான்.
மொய்
குழல் : வினைத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்
தொகை. எய்தும் + ஓ : ஓகாரம் ஐயம்பற்றிய வினா. கன்னியோ - ஓ :
வியப்பு இடைச்சொல். முன்னர் - அர் : பகுதிப்பொருள் விகுதி. எனா :
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
(237)
|