|
திருமணமான
பெண்ணை மீட்டும் திருமணஞ்செய்தல் சிறுகுலத்தார்
தொழிலென
அரிச்சந்திரன் கூறல்
| 342. |
பொறுத்துமுன்
மங்கலம் பூண்ட பேதையை
மறுத்திரண் டாவது மணம்மு டிப்பரோ
சிறுத்தவர் செய்தொழி றிரைவ ரைப்பிதின்
நிறுத்தினீர் நீரெனா நெடிது கூறினான். |
(இ
- ள்.) பொறுத்து முன் மங்கலம் பூண்ட பேதையை- கழுத்தில்
முன்னமேயே திருமங்கிலியந் தாங்கிப் பூண்டிருக்கும் பெண்ணை, மறுத்து
இரண்டாவது மணம் முடிப்பரோ - அதனை நீக்கி இரண்டாவது திருமணம்
முடிப்பார்களோ !, திரை வரைப்பு இதில் - கடல்சூழ்ந்த உலகில், சிறுத்தவர்
செய் தொழில் - இது சிறுகுலத்தவர் செய்கின்ற செயலாகும், நீர் நிறுத்தினீர்
என - இச் செயலை உயர்குடிப் பிறந்த நீவிரும் சுயம்வரமாக நாட்டினீர்
என்று, நெடிது கூறினான் - கோபத்தோடு மொழிந்தான்.
பொறுத்து
: தாங்கி, தரித்து. முடிப்பர் + ஓ - ஓகாரம் எதிர்மறை.
திரை வரைப்பு இதில் - கடல் எல்லையையுடைய இப்பூமியில்.
(238)
| |
சந்திரதயன்
பெருமகிழ்ச்சி |
| 343. |
வள்ளல்ஈ
துரைத்தலும் மதித யன்றன
துள்ளம்விட் டோங்கிய உவகை அம்பெரு
வெள்ளம்உள் ளடக்கிளே வேந்தர் காள்இவன்
கள்ளமோ மெய்ம்மையோ கட்டு ரைத்ததே. |
(இ - ள்.)
வள்ளல் ஈது உரைத்தலும் - வள்ளலாகிய அரிச்சந்திரன்
இதனைச் சொன்னவுடன், மதிதயன் தனது உள்ளம் விட்டு ஓங்கிய
உவகையம் பெரு வெள்ளம் - மதிதயன் தனது மனத்தினின்றும் பொங்கி
எழுந்த மகிழ்ச்சியாகிய பெருவெள்ளத்தை, உள்ளடக்கி - மனத்தில்
அடக்கிக்கொண்டு, வேந்தர்காள் - அரசர்களே !, இவன் கட்டுரைத்தது
கள்ளமோ மெய்ம்மையோ - இவன் உறுதியாக உரைத்தது பொய்யோ,
மெய்யோ ? (என்று வினவினான்.)
உவகையம் - அம் : சாரியை. ஓகாரம் : ஐயம்;
ஏகாரம் :
அசை. இது, ஈது எனச் சுட்டு நீண்டது. வேந்தர்கள் -
வேந்தர்காள் என விளியாயிற்று; அரிச்சந்திரன் கூறுவது மெய்யா பொய்யா
ஆய்ந்து கூறுவீர் என்றான் மதிதயன்.
(239)
| |
அரிச்சந்திரன்
கூறுவது பொய்யென ஏனை அரசர் கூறுதல் |
| 344. |
தையலாள் கழுத்தினில் தாலி உண்டெனில்
கையினால் கண்ணுறக் காட்டு நீரெனச்
செய்கை அறைந்தணி மூக்கிற் சேர்த்திஇவ்
வையனும் பொய்யனென் றரசர் கூறினார். |
|