|
(இ
- ள்.) அண்டர் நாயகன் வரம் அளித்த நாளையில் -
தேவர்கள் தலைவனாகிய சிவபெருமான் வரங்கொடுத்த நாளில், வண்டு
அணி குழலியோடு உதித்த மங்கலம் - வண்டுகள் மொய்க்கின்ற
கூந்தலையுடைய இம் மகளோடு தோன்றிய திருமங்கிலியத்தை, கண்டவர்
இவட்குப் பதி என்ற கட்டுரை - கண்டவர் இவளுக்கு நாயகன் என்ற
உண்மை மொழி, உண்டு - இருக்கிறது, அஃது அன்றி வேறு உண்டு
கேட்டிர் - அதுமட்டும் அன்றி மற்றொன்றும் உண்டு கேட்பீராக
(என்றான்.)
ஆல்
: அசை. கேட்டிர் - கேள் : பகுதி; இர் : முன்னிலைப்பன்மை
வினைமுற்று விகுதி.
சிவபெருமான் எனக்குப் பிள்ளை வரம் அருளியபோது 'உனக்கு ஒரு
பெண் மகவு பிறக்கும். அம் மகவின் கழுத்தில் திருமங்கிலியம்
அமைந்திருக்கும். அது மற்றொருவர் கண்ணுக்கும் தோன்றாது; மணப்
பருவமடைந்தபோது அம் மங்கிலியத்தைக் கண்டவனையே
கணவனாகக்கொண்டு மணமுடிக்க. இம் மறையினை மணவாளன்
வருங்காறும் பிறர்க்குக் கூறாதே' என்று கூறினர் என்று மதிதயன் கூறினன்
எனக் கொள்க.
(242)
| 347. |
மஞ்சனச்
சடையினான் வரத்தில் வந்தநாள்
கஞ்சன நீழலிற் காண்ப தன்றியே
அஞ்சனக் கண்ணிக்கு மங்கைக் கெய்திடா
தெஞ்சலில் யாவரும் யானும் கண்டிலேம். |
(இ - ள்.) மஞ்சனச் சடையினான்
வரத்தில் வந்த நாள் - கங்கை
நீர் ஆடிய சடையினையுடைய சிவபெருமானது வரத்தினால் சந்திரமதி
பிறந்த நாள் முதலாக, கஞ்சன நீழலில் - கண்ணாடி நிழலிலே,
காண்பதன்றி - இவள் திருமங்கிலியத்தை நாங்கள் காண்பதல்லாமல்,
அஞ்சனக் கண்ணிக்கும் - மையுண்ட கண்களையுடைய சந்திரமதிக்கும்,
அங் கைக்கு எய்திடா - அவளுடைய அழகிய கைகளுக்கும் தொட
அகப்படாது, எஞ்சல் இல் யாவரும் - குறைவில்லாத எவரும், யானும்
கண்டிலேம் - நானும் பார்த்ததில்லை.
யாவரும் : முற்றும்மை, யானும் : இறந்ததுதழீஇய எச்சவும்மை;
கண்டிலேம் : தன்மைப்பன்மை எதிர்மறை வினைமுற்று. காண் : பகுதி;
ட் : இறந்தகால இடைநிலை. இல் : எதிர்மறை இடைநிலை; ஏம் :
தன்மைப்பன்மை வினைமுற்று விகுதி. நீழல் : நீட்டல் விகாரம். மஞ்சனம்
- நீராடல்; கஞ்சனம் - கண்ணாடி. கண்ணிக்கும் : இதில் உம்மை
உயர்வுசிறப்பு. அவள் கைக்கும் அகப்படாதெனில் மற்றவர் கையாற்
கண்டுபிடிக்க வியலாது என்பது கூறாமலே விளங்கிற்று.
(243)
சந்திரமதி அரிச்சந்திரன்
நாமத்தையே நாவினால் சொல்லிக்கொண்டு
'அவன் மார்பில் இம்மாலை சேர்வதாக' என்று
சுயம்வர மாலையை வானத்தெறிதல்
மேற்படி வேறு
| 348. |
என்றலும்
வல்லிமுன் எண்ணிய நாமம்
ஒன்றல துள்ளுற உன்னலள் ஆகிச் |
|