பக்கம் எண் :


179

சென்றவன் மார்பிது சேர்கென உன்னா
மன்றலர் மாலையை வானில் எறிந்தாள்.

     (இ - ள்.) என்றலும் - என்று சந்திரதயன் கூறிய உடன், வல்லி -
கொடிபோன்ற சந்திரமதி, முன் எண்ணிய நாமம் ஒன்றலது உள்ளுற
உன்னலள் ஆகி - தான் முன்னே நினைத்த அரிச்சந்திரனுடைய நாமம்
ஒன்றேயன்றி வேறொன்றும் மனத்தினால் நினைத்துச் சொல்லாதவளாகி,
அவன் மார்பு இது சென்று சேர்க என - அரிச்சந்திரன் மார்பில் இது
போய்ப் பொருந்துவதாக என்று, உன்னா - எண்ணி, மன்றலர் மாலையை
வானில் எறிந்தாள் - மணமாலையை வானில் எறிந்தாள்.

     வல்லி : உவம ஆகுபெயர். உன்னலள் : முற்றெச்சம். உன்னா :
செய்யா என்னும் வாய்பாடடு வினையெச்சம். மன்றல் + அலர் - மன்றலலர்
என்பது மன்றலர் என லகரம் மறைந்தது. இது தொகுத்தல் விகாரம். சேர்க
+ என = சேர்க வென என்பது சேர் கென அகரம் மறைந்தது. இதுவும்
தொகுத்தல் விகாரம்.
                                                   (244)

   சுயம்வர மாலையும், சந்திரவதி மனமும், பார் மன்னர் கண்களும்
          அரிச்சந்திரன் மார்பிற் பொருந்தின
  

349. வார்பயில் பூண்முலை மாலையும் நெஞ்சும்
பார்பயில் மன்னவர் பற்பலர் கண்ணும்
தார்பயில் வேல்அரிச் சந்திரன் என்பான்
மார்பில் அணைந்து மலர்ந்தன மன்னோ.

     (இ - ள்.) வார் பயில் பூண் முலை மாலையும் நெஞ்சும் - கச்சுக்
கிடந்த ஆபரணங்கள் அணிந்த தனங்களையுடைய சந்திரமதியின் சுயம்வர
மாலையும் அவளுள்ளமும், பார் பயில் மன்னவர் பற்பலர் கண்ணும் -
மண்ணாளும் பலபல மன்னர்களின் கண்களும், தார் பயில் வேல்
அரிச்சந்திரன் என்பான் மார்பில் - மாலைகள் அசைகின்ற வேலா
யுதத்தையுடைய அரிச்சந்திரன் என்ற அரசனது மார்பில், அணைந்து
மலர்ந்த - சேர்ந்து விரிந்தன.

     உம்மைகள் எண்ணும்மை. பல + பலர் + பற்பலர். மன், ஓ : அசை.
மாலையும் நெஞ்சும் கண்ணும் மலர்ந்தன என்பதாம். ஏனை மன்னர்கள்
கண்களால் அரிச்சந்திரனைப் பார்த்தனர். சந்திரமதி அகக்கண்ணால்
நோக்கி அகமலர்ந்தாள். பூண் முலை : அன்மொழித் தொகை. கண் :
பால்பகா அஃறிணைப்பெயர். சந்திரமதி வானில் எறிந்த மாலையானது
அரிச்சந்திரனது மார்பில் விழுந்தது. அதனைக் கண்டு மனமகிழ்ந்தாள்
சந்திரமதி; அவையில் உள்ள மன்னவர் கண்களும் மற்றவர் கண்களும்
அவன் மார்பினையே நோக்கின என்பது கருத்து.
                                                   (245)

   அரிச்சந்திரன் முகம் சூரியன்போல் விளங்கிற்று; ஏனை மன்னர்
      முகங்கள் சூரியன்முன் சந்திரன்போல் ஒளி மழுங்கின
  

 
350. வஞ்சி வழங்கிய மாலை அணிந்தோன்
செஞ்சுட ரின்முக நின்றொளி செய்ய