|
இச்செய்யுள்
குளகம். அணிந்து, புலர்த்தி, அணிந்து, எறிந்து என்ற
செய்து என் வாய்பாட்டு எச்சங்கள், ஒன்றையொன்றடுக்கி புணர்ந்தார் (252)
என்ற வினைமுற்றைக்கொண்டு முடியும்.
(250)
| 355. |
மல்லிகை
சண்பகம் மாதவி புன்னை
முல்லை குராமகிழ் முண்டக நீலம்
அல்லி நிறைந்த செவந்தி செருந்தி
புல்இதழ் வாசம் அணைந்து புனைந்தார். |
(வி
- ம்.) மல்லிகை சண்பகம் மாதவி புன்னை முல்லை குரா மகிழ்
முண்டகம் நீலம் - மல்லிகைப்பூ சண்பகப்பூ குருக்கத்திப்பூ புன்னைப்பூ
முல்லைப்பூ குரவம்பூ மகிழம்பூ தாமரைப்பூ குவளைப்பூ, அல்லி நிறைந்த
வெசந்தி - அக இதழ்கள் நிறைந்த செவந்திப்பூ, செருந்தி - செருந்திப்பூ
ஆகிய இம் மலர்களின், புல் இதழ் வாசம் அணைந்து புனைந்தார் -
சேர்ந்த இதழ்களின் மணங்கள் கலக்கும்படி அவற்றைப் புனைந்து (252)
புணர்ந்தார்.
புனைந்தார்
என்ற வினைமுற்று எச்சப்பொருளைத் தந்தது. புல் இதழ்
: சிறிய இதழ் எனவும் கூறலாம். அல்லி : அகவிதழ். மலரின்
உட்புறத்திருக்கும் இதழ்.
(251)
| |
சந்திரமதியும்
அரிச்சந்திரனும் புல்லிப் புணர்தல் |
| 356. |
அங்கையொ
டங்கை அணைத்துடல் ஒன்றக்
கொங்கை புயத்திரள் குன்றில் அழுந்தச்
செங்கயல் சென்று திருக்குழை தாவ
மக்கையும் மன்னும் மகிழ்ந்து புணர்ந்தார். |
(இ - ள்.)
அங் கையொடு அங் கை அணைத்து - அழகிய
கைகளோடு கைகளை அணைத்து, உடல் ஒன்ற - இருவர் உடம்புகளும்
ஒன்று சேர்ந்து பொருந்த, கொங்கை புயத் திரள் குன்றில் அழுந்த -
சந்திரமதியின் தனங்கள் அரிச்சந்திரனுடைய மலைபோன்ற திரண்ட
தோள்களில் அழுந்த செங் கயல் சென்று திருக்குழை தாவ -
சந்திரமதியின் சிவந்த கயல் போன்ற கண்கள் போய் அழகிய
காதணிகளில் பாயவும், மங்கையும் மன்னும் - சந்திரவதியும்
அரிச்சந்திரனும், மகிழ்ந்து புணர்ந்தனர் - மகிழ்ச்சியோடு கூடினார்கள்.
செங் கயல் : அடையடுத்த உவமையாகுபெயர், செம்மையான
கயல்
போன்ற விழி எனப் பொருள் தரலால். சந்திரமதி கண்கள் அவள்
காதணிகளிற் சென்று மோத என்று பொருள் கொள்க. மன்னன்
'திருக்குழை தாவ, என்பது பொருத்தமன்று, 'செங்கயல்' என்பதனை
மன்னன் விழி என்று கொள்வதும் பொருத்தமன்று.
(252)
| |
கூடற்
சிறப்பு
வேறு |
| 357. |
வாசமார்
மாலை மன்னவன் முன்நாள்
மருவிடா வெகுளியின் மலைந்து
பூசல்வேள் பலகால் எய்தபுண் ணுக்குப்
புணர்முலை வேது கொண் டொற்றி |
|