பக்கம் எண் :


183

மாசிலா மணிசெய் சூடகக் காந்தண்
   மலர்க்கரம் ஆகமேற் கட்டி
ஆசைநோய் தீர அமுதவாய் உதகம்
   அளித்தனள் அரிவையர் பெருமாள்.

     (இ - ள்.) அரிவையர் பெருமாள் - பெண்ணரசியாகிய சந்திரவதி,
வாசம் ஆர் மாலை மன்னவன் - மணம் நிறைந்த மாலையணிந்த
அரிச்சந்திரனுக்கு, பூசல் வேள் - காமப் போர்புரி மன்மதன், முன் நாள்
மருவிடா வெகுளியின் மலைந்து - இதற்கு முன்னாளிற் புணர்ந்திடாத
கோபத்தினாலே பொருது, பலகால் எய்த புண்ணுக்கு - பல முறை
அம்பெய்த புண்ணுக்கு, புணர் முலை வேது கொண்டு ஒற்றி - தன்
இரண்டு கொங்கைகளாகிய வெம்மைப் பொருள் கொண்டு பொருந்தி,
மாசு இலா மணி செய் சூடகக் காந்தள் மலர்க்கரம் ஆகம் மேல் கட்டி
- குற்றமற்ற மாணிக்கங்களாற் செய்யப்பட்ட கங்கணங்களணிந்த காந்தள்
மலர்போன்ற கைகளாலே அவன் மார்புமேல் இறுகக் கட்டி அணைத்து,
ஆசை நோய் தீர - காதற்பிணி நீங்க, அமுத வாய் உதகம் அளித்தனள்
- தனது அமுத வாய் நீரைக் கொடுத்தாள்.

     மருவிடா : ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். சந்திரமதியின்
எழிலும் பண்பும் முனிவர் வாயிலாகக் கேட்டறிந்த காலமுதல் மன்மதன்
போர்புரிந்தான் என்றும், காதல் தோன்றியகாலத்தே வந்த புணராததாற்
பெருஞ்சினங்கொண்டு பாணங்களை விடுத்தான் என்றும், அவற்றால்
புண்பட்ட உடம்புக்கு வேது கொடுத்துத் துணிகளால் இறுகக் கட்டிப்
புண்களை ஆற்றுவது போலக் கொங்கை வேது கொடுத்துக் கைகளாற்
கட்டிப் புண் ஆற்றினள் என்றும், காமப்பிணி நீங்க அமுதவா யூறலாகிய
அருமருந்தளித்தனள் என்றும் கொள்க. இஃது உருவகவணி.
                                                   (253)

 
        புலவியும் கலவியும்
358. கண்டகண் வாங்கா திருவரும் மதனால்
   கலவியும் புலவியும் விளைத்து
முண்டக வதனம் வெயர்அரும் பிடினும்
   முகிழ்முலை வடம்அசைந் திடினும்
கொண்டலங் குழலில் வண்டலம் பிடினும்
   குறைவிலா நிறைஇடர் எய்தி
மண்டலத் தரசன் சிந்தைஅம் மங்கை
   மருங்குலின் ஒருவழித் தன்றே.

     (இ - ள்.) இருவரும் மதனால் - அரிச்சந்திரன் சந்திரமதி ஆகிய
இருவரும் காமன் போரினால் (காதலால்), கலவியும் புலவியும் விளைத்து -
ஒருவரையொருவர் பார்த்த கண் இமையாமற் பார்த்துப் பார்த்து கூடலும்
ஊடலும் புரிந்து, முண்டக வதனம் வெயர் அரும்பிடினும் - தாமரை
போன்ற முகம் வெயர்த்தாலும், முகிழ் முலை வடம் அசைந்திடினும் -
தாமரை அரும்புபோன்ற தனங்களிலே முத்துமாலைகள் அசைந்தாலும்,
கொண்டல்