பக்கம் எண் :


185

     பல பண்டங்களைக் கலத்திலேற்றிக் கடனீந்திக் கரைவந்து துறை
சேர்ந்தவர்கள் கலங் கவிழுமென்று விரைந்து பாரத்தை இறக்குவது போலச்
சந்திரமதி ஆடையும் அணியும் இடைக்குப் பாரம் என எண்ணி அவற்றைக்
களைந்தான் அரிச்சந்திரன் என்பது உவமை அணி.
                                                   (255)

 
  சந்திரவதி தன் உறுப்புகளாகிய படையால் அரிச்சந்திரனுடன்
           காதற்போர் புரிதல்
  
360. தானைசென் றார்க்க மங்கல மிடற்றுச்
   சலஞ்சலம் புலம்பிடத் தனக்கோட்
டானைசென் றடர மாத்தலை மயங்க
   அல்குலந் தேரினைச் செலுத்தி
மீனைவென் றடுகண் வேல்படப் புருவ
   வில்வளைத் தயோத்தியர் வேந்தைத்
தேனைவென் றினித்த செஞ்சொலா ளின்பச்
   செருத்தொழில் பற்பல விளைத்தாள்.

     (இ - ள்.) தானை சென்று ஆர்க்க - மேகலையாகிய சேனை
அங்கு மிங்கும்சென்று ஆரவாரிக்கவும், மங்கல மிடற்றுச் சலஞ்சலம் -
திருமங்கிலியம் விளங்குகின்ற கழுத்தாகிய சங்கு முழங்கவும், தனக்
கோட்டு ஆனை சென்று அடர - கொங்கைகளாகிய கொம்புகளை யுடைய
யானைகள் போய்ப் பாயவும், மாத்தலை மயங்க - வண்டுகளாகிய
குதிரைகள் இடம் மயங்கித் திரியவும், அலகுல் அம் தேரினைச் செலுத்தி
- அல்குலாகிய அழகிய தேரைச் செலுத்தி, மீனை வென்று அடு கண்
வேல் பட - மீன்களை வென்று போர் செய்யும் கண்களாகிய வேல்
பாயவும், புருவ வில் வளைத்து - புருவமாகிய வில்லை வளைத்து,
அயோத்தியர் வேந்தை - அயோத்தி அரசனாகிய அரிச்சந்திரனோடு,
தேனை வென்று இனித்த செஞ்சொலாள் - தேனினும் இனிய செவ்விய
மொழியுடைய சந்திரமதி, இன்பச் செருத்தொழில் பற்பல விளைத்தாள்-
காதல் இன்பமாகிய போர்த்தொழிலைப் பலபல முறையிற் புரிந்தாள்.

     வேந்தை : இரண்டனுருபு மூன்றவதன் பொருளில் வந்த உருபு
மயக்கம், தானையைச் சேனையாகவும், மிடற்றைச் சங்காகவும்,
கொங்கைகளைக் கோட்டு யானைகளாகவும், வண்டுகளைக்
குதிரைகளாகவும், அல்குலைத் தேராகவும், கண்ணை வாளாகவும்,
புருவத்தை வில்லாகவும், கலவியைப் போராகவும்
உருவகப்படுத்தினமையின் முற்றுருவன வணி.
                                                   (256)

 
  அரிச்சந்திரனும் சந்திரமதியும் கன்னோசி கடந்து
        அயோத்தி அடைதல்
  
361. இந்நெறி தளரா திறைவனும் மயிலும்
   இன்பம்உண் டிடைவிடா திணங்கிக்
கன்னமா புரியில் சிலபகல் கழீஇப்பின்
   கடிநகர் எய்துவான் கருதி