பக்கம் எண் :


186

மன்னனும் அன்னம் எனும்நடை மயிலும்
   மணிநெடுந் தேர்மிசை ஏறிப்
பொன்அணி குடுமி நன்நெடுங் கபாடப்
   புரிசைநீத் தப்புறம் போனார்.

     (இ - ள்.) இந்நெறி தளராது இறைவனும் மயிலும் இன்பம் உண்டு
இடைவிடாது இணங்கி - இத்தகைய இன்பமுறை தளர்ச்சி யடையாமல்
அரிச்சந்திரனும் மயிலன்ன சாயலுடைய சந்திரமதியும் இன்பந்துய்த்து
இடைவிடாமல் கூடி, கன்னமாபுரியில் சில பகல் கழீஇ - கன்ன மாபுரியில்
சிலநாட் கழித்து, பின் கடிநகர் எய்துவான் கருதி - பின்பு தனது
காவலையுடைய அயோத்தி நகரம் போகவேண்டும் என எண்ணி,
மன்னனும் - அரிச்சந்திரனும், அன்னம் எனும் நடை மயிலும் -
அன்னமன்ன நடையும் மயிலன்ன சாயலுமுடைய சந்திரமதியும், அணி
நெடுந் தேர்மிசை ஏறி - அழகிய பெரிய தேரின் மேல் ஏறி. பொன் அணி
குடுமி நன்னெடுங் கபாடப் புரிசை நீத்து - பொன்னால் அணி
செய்யப்பட்ட சிகரங்களையும் நல்ல பெரிய கதவுகளையுமுடைய
கன்னோசி நகரின் கோட்டையைக் கடந்து, அப்புறம் போனார் -
அப்புறம் சென்றார்கள்.

     கழீஇ : சொல்லிசை யளபெடை; கடிநகர் : உரிச்சொற்றொடர்.
எய்துவான் : வான் ஈற்று வினையெச்சம். கன்னமாபுரியிற் சிலநாட்
கழித்தனர். பின்னர் அயோத்திக்குச் செல்லத் தொடங்கினர். கோட்டையை
விட்டு நீங்கிப் புறத்தே வந்தனர் என்பது.
                                                   (257)

  அரிச்சந்திரனும் சந்திரமதியும் கன்னமாபுரிவிட்டு நீங்கல்   
362.

பன்னிறத் தனந்தம் கதிரெழுந் தனபோல்
   பலமணிக் குடைகள்மேல் நிழற்ற
நன்னெறித் தவளக் கொடிமிசை நெருங்க
   நவமணிக் காகளம் ஆர்ப்ப
மின்னுறக் கொடிமேன் மருங்குலார் மருங்கு
   மிடைந்துவெண் சாமரம் இரட்ட
அன்னிறப் பொழில்சூழ் கன்னமா புரியின்
   அரணமும் அகழும்விட் டகன்றார்.

     (இ - ள்.) பன் நிறத்து அனந்தம் கதிர் எழுந்தனபோல் - பல
நிறங்களையுடைய பல சூரியர்கள் எழுந்ததைப்போல, பல மணிக்குடைகள்
மேல் நிழற்ற - பல மணிக்குடைகள் மேலே நிழலைச்செய்ய, நல் பல
நெறித் தவளக்கொடி மிசை நெருங்க - நன்னெறி போன்ற வெள்ளைக்
கொடிகள் மேலே நெருங்கவும், நவமணிக் காகளம் ஆர்ப்ப - நவமணிகள்
பதித்த எக்காளம் ஊதவும், மின்னிறக் கொடி மென் மருங்குலார் -
மின்னலைப்போல் ஒளிவிடும் கொடிபோன்ற மெல்லிய இடையையுடைய
பெண்கள், மருங்கு மிடைந்து - பக்கங்களிலே நெருங்கி, வெண் சாமரம்
இரட்ட - வெண் சாமரை வீசவும், அல் நிறப் பொழில் சூழ் கன்னமா
புரியின் - இருள்நிறமான சோலைகள் சூழ்ந்த கன்னமாபுரியினுடைய,
அரணமும் அகழும் விட்டு அகன்றார் - கோட்டையும் அகழியும் விட்டு
நீங்கினார்கள்.