|
(இ
- ள்.) திருவே - திருமகளைப் போன்றவளே!, செழுமலர்க்கா
எலாம் - செழுமையான பூஞ்சோலைகளிலெல்லாம், ஒண் பெடைகள் -
அழகிய பெண் வண்டுகள், செய்ய மாமலர் அடுத்து - செம்மையான
பெரிய பூக்களை அடைந்து, தேன் அருந்தா - தேன் குடியாது, பையவே
- மெள்ள, சுரும்பு அடை வழி பார்த்து இனிது உறல் - ஆண் வண்டுகள்
வருகிற வழியைப் பார்த்து மகிழ்ச்சியோடு தங்குதல், தையலார் -
இவ்வுலகில் உத்தமப் பெண்கள், உணவு அமைத்து - சோறு சமைத்து,
அன்பர் தாம் வர நோக்கம் செய்யும் நாள் ஒத்த - தங்கள் நாயகர்கள்
வரவைப் பார்த்துக்கொண்டிருக்கும் காலத்தை ஒத்திருக்கின்றது.
செய்ய
மலர் : பெயரெச்சத்தொடர், மா மலர் : உரிச்சொற்றொடர்.
ஒண் பெடை : பண்புத்தொகை; பெடைகள் + தேனருந்தா - பெடைக
டேனருந்தா; அருந்தா : விகுதி கெட்டு நின்ற எதிர்மறை வினையெச்சம்.
செழு மலர் : பண்புத்தொகை. எலாம் : தொகுத்தல். உவமையணி.
(262)
| |
கருங்குயிற்
குஞ்சுகளைக் காக்கை துரத்துவது |
| 367. |
கடிம
னைக்கணே தமர்நிறீஇ ஏதிலார்க் கடியும்
கொடியர் போலத்தம் பிள்ளையைக் கூட்டினிற் கூட்டி
வடிநெ டுங்கணாய் மலர்நெடும் சோலைக டோறும்
கொடியி னம்கருங் குயில்களைத் துறப்பன குறியாய். |
(இ - ள்.)
வடி நெடுங் கணாய் - கூர்மையான நீண்ட கண்களை
யுடைய சந்திரமதியே !, கடி மனைக்கணே - காவலையுடைய தங்கள்
வீட்டிலே, தமர் நிறீஇ - தம்மைச் சார்ந்தவர்களை இருக்கச் செய்து,
ஏதிலார்க் கடியும் கொடியர்போல - அயலாரை நீக்குகின்ற
கொடியவர்போல, மலர் நெடும் சோலைகள்தோறும் - பூமலர்ந்த நீண்ட
சோலைகளின் இடமெல்லாம், கொடியினம் தம் பிள்ளையைக் கூட்டினில்
கூட்டி - காக்கைகள் தம் குஞ்சுகளைக் கூட்டினிலிருக்கச் செய்து,
கருங்குயில்களைத் துறப்பன - கரிய குயில்குஞ்சுகளை ஓடச்செய்வன,
குறியாய் - கவனித்துப் பார்ப்பாயாக.
குயில்கள் காக்கையின் கூடுகளில் முட்டையிட்டு
வைக்கின்றன.
காக்கைகள் தம் முட்டைகளோடு அவற்றையும் அடைகாக்கின்றன. குயில்
குஞ்சு வெளிவந்தவுடன் அதன் கூவலொலியால் தன் குஞ்சு அல்ல எனக்
கண்டதும் துரத்திவிடுகின்றன.
கடி மனை : உரிச்சொற்றொடர்; நிறீஇ : சொல்லிசை
யளபெடை
உவமையணி. காணாய் : கணே, தொகுத்தல். கொடி - காக்கை. குறியாய்;
முன்னிலை ஏவல் வினைமுற்று.
(263)
| |
வயலுட்
புகாது வெளியிற் பரவிய நீர் |
| 368. |
ஆர
நீண்மடைப் படப்பையிற் புகாதிடை அழுந்து
தூர வோடியே வெளியிடைப் பரவுந் தோயம்
தார மானவள் வருந்திடக் கணிகையைச் சாரும்
சோர ரொத்தன முத்தன திருநகைத் தோகாய். |
|