பக்கம் எண் :


191

     (இ - ள்.) மயிலே - மயில் போன்ற சாயலையுடையாய்!, மதகு
மங்கலம் முரசு எழு - மதகுகளின் நீர்வீழ்ச்சி மங்கலமுரசின் ஒலி போலத்
தோன்றவும், வண்டு வாழ்த்து இசைக்க - வண்டுகள் முழங்குவது
மங்கலவாழ்த்தொலிபோலத் தோன்றவும், உதிரம் ஒத்த செந் தாமரை -
குருதிபோலச் சிவந்த தாமரை மலர்கள், ஓமத்தீ வளர்ப்ப - வேள்வித் தீ
வளர்ப்பதுபோலத் தோன்றவும், புது மலர் - புதிய தாமரை மலரில், துணை
புணர் இள அன்னமும் பெடையும் - வாழ்க்கைத் துணையாகச் சேர்கின்ற
இளமையான ஆண் அன்னமும் பெடையும், வதுவை செய்வன ஒப்பன
கண்டருள் - மணமுடிப்பனபோலத் தோன்றுகின்றன அவற்றை நீ
காண்பாய்.

     மதகில் நீர் வீழ்ச்சியொலியை முரசொலியாகவும், வண்டு
முழங்குவதை வாழ்த்தொலியாகவும், செந்தாமரைப்பூவை
வேள்வித்தீயாகவும் உருவகஞ்செய்திருப்பதால் இஃது உருவகவணி.
                                                   (266)

    செந்தாமரை மலரை எருமைக் கன்று கடிப்பது   
371.

வெடித்த வாற்சிறு கன்றுகண் வேதியின் முலைப்பால்
குடித்த வேம்பலால் அரும்பலர் கோகன கப்பூக்
கடித்து வாங்குதல் ஊடலின் மகளிர்கை கணவர்
பிடித்து வாங்குதல் ஒப்பது பெண்கொடி பாராய்.

     (இ - ள்.) பெண் கொடி - பெண்ணாகிய பூங்கொடியே!, வெடித்த
வால் சிறு கன்றுகள் - மேலே தூக்கிக்கொண்டிருக்கிற வாலையுடைய சிறு
கன்றுகள், மேதியின் முலைப்பால் குடித்த ஏம்பலால் - எருமையின்
மடியிற் பால் குடித்த மகிழ்ச்சியால், அரும்பு அலர் கோகனகப் பூக்
கடித்து வாங்குதல் - அரும்பாயிருந்து மலர்கின்ற தாமரைப்பூவைக் கடித்து
இழுத்தல், ஊடலில் மகளிர் கை கணவர் பிடித்து வாங்குதல் ஒப்பது -
ஊடற்காலத்தில் பெண்களின் கையை நாயகர் பிடித்து இழுப்பதுபோன்
றிருக்கின்றது, பாராய் - பார்ப்பாயாக.

     எருமைக் கன்றுகள் செந்தாமரை மலரைக் கடித்திழுப்பது
ஊடற்காலத்தில் மகளிர் செங்கையைக் கணவர் பிடித்திழுப்பது போலத்
தோன்றுகிறது பார் என்றான். இஃது உவமையணி.
                                                   (267)

        அன்னம் மீன் அருந்தும் இயல்பு   
372. இத்த டத்துமீன் அருந்திய அன்னங்கள் எல்லாம்
அத்த டத்தில்மொய்த் திழிவன அருநிதி எல்லாம்
தத்த மக்களித் திழந்தவர் தங்களைத் துறந்து
கைத்து ளார்கட்செல் கணிகையர் ஒப்பன காணாய்.

     (இ - ள்.) இத்தடத்து மீன் அருந்திய அன்னங்கள் எல்லாம் -
இந்தக் குளத்தில் மீன் கொத்தித் தின்ற அன்னங்கள் எல்லாம்,
அத்தடத்தில் மொய்த்து இழிவன - அந்தக் குளத்தில் நெருங்கியிருந்து
நீரில் இறங்குகின்றவாகிய தன்மை, அருநிதி எல்லாம் - அருமையான
பொருள் முழுதும், தத்தமக்கு அளித்து - பொதுமகளிர்க்கே கொடுத்து,
இழந்தவர்