பக்கம் எண் :


192

தங்களை - கைப்பொருளைத் தொலைத்தவர்களை, துறந்து - விட்டு நீங்கி,
கைத்துளார்கண் செல் கணிகையர் ஒப்பன - கைப்பொருளுடையவர்களிடம்
போகின்ற பொதுமகளிர் போன்றன, காணாய் - பார்ப்பாயாக.

     நிதி எல்லாம் : ஒருமைப்பன்மைமயக்கம்; காணாய் : முன்னிலை
ஏவல் வினைமுற்று. ஒரு குளத்திலுள்ள மீன்களையெல்லாம் கொத்தித்
தின்ற அன்னப்பறவைகள் மற்றொரு குளத்திற்குச் சென்று நெருங்கி
நிற்கும் தோற்றமானது தமக்குப் பொருள் எல்லாம் கொடுத்து
வறியவரானவரை விடுத்துச் செல்வமுள்ளவர்களைத் தேடிச்செல்லும்
பரத்தையர் போலத் தோன்றுகிறது என்பது. இஃது உவமையணி.
                                                   (268)

 
        கயல் மீன் பாயுங் காட்சி   
373. மேயும் ஓதிமம் சேலினைக் கவர்ந்திட வெருண்டு
பாயும் நீள்கயல் செங்கம லத்தலர் படிவ
வாயின் மிக்கநற் கணவனை அமரிடை இழந்து
தீயில் வீழ்குவார் ஒப்பன திருந்திழை காணாய்.

     (இ - ள்.) திருந்து இழை - திருத்தமான அணிகலன்கள் அணிந்து
உள்ள சந்திரமதியே!, மேயும் ஓதிமம் சேலினைக் கவர்ந்திட - மீன்
கவரும் அன்னம் சேல்மீனைக் கொத்திவிழுங்க, வெருண்டு - அதற்குப்
பயந்து, பாயும் நீள் கயல் - பாய்கின்ற பெரிய கயல் மீன்கள், செங்கமலத்
தலர் படிவ - செந்தாமரைமலரில் பாய்ந்து விழுங் காட்சி, ஆயின் மிக்க
நற் கணவனை - தாயிற் சிறந்த அன்புடைய நல்ல கணவனை, அமரிடை
இழந்து - போரில் பேரமர் புரிந்து, யாக்கை நீத்து வீரத்துறக்கம்
அடையப்பெற்றதால் இழந்து, தீயில் வீழ்குவார் ஒப்பன - நெருப்பில் வீழும்
கற்புடைப் பெண்களைப் போல் தோன்றுகின்றன. காணாய் - பார்ப்பாய்.

     கயல் மீன்கள் செந்தாமரை மலரில் பாய்ந்து தங்குவன கற்புடைப்
பெண்கள் தீயில் வீழ்ந்து பொருந்துவன போன்ற எனத்
தொழிலுவமாகக்கொண்டு உரைக்க. சேல் - ஆண் மீன். கயல் - பெண்
மீன். செந்தாமரை தீக்கு உவமானம். உவமையணி. திருந்திழை :
அன்மொழித்தொகை.
                                                   (269)

 
          அன்னப்பபவை ஊடியிருத்தல்  
374. கூடும் அன்னங்கள் பறந்திரை கவர்ந்திடக் குழாத்தில்
ஊடும் உன்னம்ஒன்று உயர்ந்ததா மரைமிசை உகள
நீடு வார்கழை ஏறியே நிறைஅவை நடுநின்
றாடு வேழம்ப மாதரை நிகர்த்தல்பார் அணங்கே.

     (இ - ள்.) அணங்கே - தெய்வப்பெண் போன்றவளே!, கூடும்
அன்னங்கள் பறந்து இரை கவர்ந்திட - கூடியிருக்கிற அன்னங்கள்
பறந்துபோய் இரையைப் பொறுக்கித் தின்ன, குழாத்தில் ஊடும் அன்னம்
ஒன்று - அன்னக்கூட்டத்தில் ஊடியிருக்கிற ஓர் அன்னமானது, உயர்ந்த