|
தாமரை மிசை உகள
- உயர்ந்த தாமரைத்தண்டின் மேல் தாவியிருப்பது,
நீடு வார் கழை ஏறியே - மிக நீண்ட மூங்கிலின் மேலேறி, நிறை அவை
நடுநின்று - நிறைந்த சபை நடுவே நின்று, ஆடு வேழம்ப மாதரை
நிகர்த்தல் பார் ஆடுகின்ற கழைக்கூத்து மங்கையைப் போன்றிருத்தலைப்
பார்ப்பாயாக.
நீடு
வார் : ஒருபொருட்பன்மொழி; அணங்கு ; உவமையாகு பெயர்;
உவமையணி. ஊடும் அன்னம் : ஆண் அன்னத்துடன் பிணங்கிய பெடை
யன்னம். ஊடிய அன்னம் உயர்ந்த தாமரைத் தண்டின்மேல் இருந்தசைவது
கழைக்கூத்தி கழைமேலிருந்தாடுவது போலத் தோன்றுகிறது என்று கொள்க.
இஃது உவமையணி.
(270)
| |
செந்தாமரையில்
வண்டு தேனருந்தல் |
| 375. |
நன்பு
னற்பது மம்துதைந் தளிநற வுணலால்
வன்பி னில்பிடித் தூடிய மகளிரை மணாளர்
அன்பு றத்தெவிட் டாவித ழாரமு தருந்தும்
இன்ப மெல்லணை ஒப்பன விளங்கொடி காணாய். |
(இ - ள்.)
இளங்கொடி - இளமையாகிய பூங்கொடி போன்ற
பெண்ணே!, நல் புனல் பதுமம் அளி - நல்ல நீரிலே மலர்ந்துள்ள
தாமரையானது, அளி துதைந்து நறவு உணலால் - வண்டுகள்
நெருங்கியிருந்து தேன் குடிப்பதால், மணாளர் - நாயகர், ஊடிய மகளிரை
- தம்மோடு பிணங்கிய தலைவியரை, வன்பினில் பிடித்து - வலிந்து
பிடித்து இழுத்து, அன்புற - அன்போடு, தெவிட்டா இதழ் ஆரமுது
அருந்தும் - தெவிட்டாத இதழ்களிலுள்ள தேன் போன்ற அருமையாகிய
அமுதத்தைப் பருகும், இன்ப மெல்லணை ஒப்பன காணாய் - இன்பத்தைக்
கொடுக்கிற மெல்லிய மெத்தை ஒத்திருப்பன பார்ப்பாயாக.
உவமையணி; நன் புனல் : பண்புத்தொகை; ஆல் :
அசை.
வண்டு நெருங்கித் தேன் உண்ணும் பதுமமானது ஆடவர்
மங்கையரோடு புணர்ந்து இன்பம் நுகரும் மெல்லணை போலத்
தோன்றியது என்க. அளி துதைந்து நற வுண்ணலால் நன் புனல் பதுமம்
மெல்லணை ஒப்பன எனக் கூட்டுக. பதுமம் மெல்லணை, தேன், மங்கையர்,
வண்டு, ஆடவர் எனக் கொள்க.
(271)
| |
நெற்கதிருடன்
தாமரை யறுபட்டுக் கிடத்தல் |
| 376. |
துஞ்ச
வந்தநாட் டோழரை விட்டயல் துறக்கும்
வஞ்ச நெஞ்சர்போல் அலாதுவண் டணிகுழல் மாதே
அஞ்ச லாதுநின் றவருடன் இறந்தநல் லவர்போல்
கஞ்ச நெல்லுடன் அறுப்புண்டு கிடப்பன காணாய். |
(இ
- ள்.) வண்டு அணி குழல் மாதே - வண்டுகள் மொய்க்கும்
அழகிய கூந்தலுடைய பெண்ணே!, துஞ்ச வந்த நாள் தோழரை விட்டு
அயல் துறக்கும் வஞ்ச நெஞ்சர் போல் அலாது - இறப்பு வந்த நாளில்
|