பக்கம் எண் :


194

நண்பரை விட்டுப் பிரிந்து வேறிடம் செல்கின்ற வஞ்சனை மனமுடையவர்
போலன்றி, அஞ்சலாது நின்று அவருடன் இறந்த நல்லவர் போல் -
பயப்படாது நின்று அவருடன் இறந்த நல்லவர்கள் போல, கஞ்சம்
நெல்லுடன் அறுப்புண்டு - தாமரை நெற்கதிரோடு அறுக்கப்பட்டு,
கிடப்பன - கிடப்பவற்றை, காணாய் - பார்ப்பாயாக.

     அலாது : குறிப்புவினையெச்சம்; உவமையணி. நல்லவர் போலக்
கஞ்சம் அறுபட்டன என்று உவமை கூறுவதால் நண்பருக்கு இறப்பு
நேர்ந்தபோது அந்நண்பருடன் ஒருங்கு மடியும் நல்லோர்களைப் போல,
நெற்கதிருடன் தாமரைகளும் அறுக்கப்பட்டுக் கிடக்கின்றன பார் என்று
காட்டினான்.
                                                   (272)

 
           நீராடு மகளிர் காட்சி  
377. அடல னங்கனுக் கணிஅபி டேகமே அனையாய்
மடல்கொள் வாவிநீர் குடைந்திடப் பாய்கின்ற மடவார்
மிடல்நெ டும்சிலை புயல்பிறை சுமந்துபன் மின்போய்க்
கடலில் வீழ்ந்திடு காட்சியை நிகர்ப்பது காணாய்.

     (இ - ள்.) அடல் அனங்கனுக்கு - வலிமை பொருந்திய
மன்மதனுக்கு, அணி அபிடேகமே அனையாய் - சூட்டும்
கிரீடமேபோன்றவளே!, மடல் கொள் வாவி நீர் குடைந்திட - மலர்களைக்
கொண்ட பொய்கை நீரில் குளிக்க, பாய்கின்ற மடவார் - தலைகீழாகத்
தண்ணீரில் பாய்கின்ற பெண்களின் காட்சி, மிடல் நெடுஞ் சிலை புயல்
பிறை சுமந்து பல்மின் போய்க் கடலில் வீழ்ந்திடு காட்சியை - வலிமை
பொருந்திய நீண்ட வில் மேகம் பிறைச்சந்திரன் இவைகளைச் சுமந்த பல
மின்னல்கள் போய்க் கடலில் விழுந்திடும் காட்சியை, நிகர்ப்பது காணாய்
- ஒத்திருப்பதைப் பார்ப்பாய்.

     புருவங்களுக்குச் சிலையும் கூந்தலுக்குப் புயலும் நெற்றிக்குப்
பிறையும் உவமையாயின. மின்னல் மடவார் உடம்பு எனக் கொள்க.
இவைகளையுடைய மின்னல் உலகில் இன்மையின் இல்பொருளுவமையணி.
                                                   (273)

 
  ஒரு காரிகை தன் கையாற் கூந்தரை முறுக்கும் காட்சி   
378. ஏந்தி ளந்தனத் தொருத்தியின் புனல்குடைந் தெழுந்து
கூந்தல் அம்கையால் முறுக்குவாள் குளிர்முகத் தோற்றம்
காந்தண் மாமலர் ஊடுபோய்த் திங்களைக் கரிய
பாந்த டீண்டுவ தொப்பது பசுங்கொடி பாராய்.

     (இ - ள்.) பசுங் கொடி - பசுமையான கொடிபோன்ற சந்திர
மதியே!, ஏந்து இளந் தனத்து ஒருத்தி - பருத்துயர்ந்த இளங்
கொங்கைகளையுடைய ஒரு பெண், இன் புனல் குடைந்து எழுந்து - இனிய
தண்ணீரில் நீராடி எழுந்து, அம் கையால் - அழகிய கையால், கூந்தல்
முறுக்குவாள் - கூந்தலை முறுக்கி நீரைப் பிழிபவளுடைய, குளிர்
முகத்தோற்றம் - குளிர்ந்த முகத்தின் தோற்றமானது, காந்தள் மா மலர்
ஊடு போய் - பெரிய காந்தட்