பூக்களின் ஊடே போய்,
திங்களை - சந்திரனை, கரிய பாந்தள் - கரும்
பாம்பு, தீண்டுவது ஒப்பது - பிடிப்பது போலத் தோன்றுவதை, பாராய் -
பார்ப்பாயாக.
காந்தள்
கைக்கும், கரும்பாந்தள் கூந்தலுக்கும், திங்கள் முகத்துக்கும்
உவமையாயின. பசுங்கொடி : அனிமொழித்தொகை. காந்தள்
மலருக்கிடையிற் சென்று கரும்பாம்பு திங்களைப் பற்றுவது உலகத்தில்
நிகழாதது. அதனை உவமையாகக் கூறலால் இல்பொருளுவமையணி.
(274)
ஒரு
பெண் நீர் மூழ்கும்போது கலைந்தெழுந்த வண்டுகளின் காட்சி
379. |
சிறுநு
தற்பெருங் கண்ணியோர் தெரிவைநீர் மூழ்க
நறும லர்க்குழல் வண்டெழுந் தலமந்து நரல்வ
அறநெ றிப்படி புரந்தகோல் அரசர்கள் இறக்க
மறுகும் அக்குடி போல்வன காண்டி மாமயிலே.
|
(இ
- ள்.) மா மயிலே - சிறந்த மயில் போன்ற சாயலையுடைய
பெண்ணே!, சிறு நுதல் பெருங் கண்ணி - சிறிய நெற்றியையும் பெரிய
கண்களையுமுடைய, ஓர் தெரிவை - ஒரு பெண், நீர் மூழ்க - தண்ணீரில்
முழுக, நறு மலர்க் குழல் வண்டு எழுந்து அலமந்து நரல்வ -
மணம்பொருந்திய மலரணிந்த கூந்தலிலிருந்து வண்டுகள் எழுந்து சுழன்று
மூரல்கின்ற தோற்றம், அறநெறிப்படி புரந்த கோல் அரசர்கள் இறக்க -
நீதிமுறைப்படி காவல்புரிந்த செங்கோல் மன்னர் மடிய, மறுகும் அக்குடி
போல்வன - வருந்தி மறுகுகின்ற குடிகளை ஒத்திருக்கின்றன, காண்டி -
பார்ப்பாயாக.
சிறுநுதல்
பெருங்கண்ணி : பண்புத்தொகை. முரன்தொடை; நறு மலர்
: பண்புத்தொகை; மலர்க் குழல் : இரண்டன் உருபும் பயனும்
உடன்தொக்கதொகை. உவமையணி, காண்டி : காண் : பகுதி; இ :
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி. தகரம் எழுத்துப்பேறு; டகரம்
ஆனது விகாரம்.
கூந்தலில்
இருந்த வண்டு கலைந்து எழுந்து ஒலிப்பது செங்கோலரசன்
மாய்ந்தவுடன் அந்நாட்டுக் குடிகளெழுந்து புலம்புவது போன்றிருந்தது
என்பது. இஃது உவமையணி.
(275)
ஒரு
பெண் செந்தாமரை மலர்மேற் கை வைத்திருக்கும் காட்சி
380. |
மஞ்ச
னம்குடைந் தாடிஓர் வாணுதன் மடந்தை
கஞ்ச நன்மலர்க் கடைந்ததன் மிசைக்கரம் வைத்தல்
சஞ்ச லந்தவிர் என்முகம் தனைக்கண்டு தளும்பா
தஞ்ச லென்றுகை அமைப்பது நிகர்த்தல்பார் அணங்கே. |
(இ - ள்.)
அணங்கே - தெய்வப்பெண் போன்றவளே!, ஓர் வான்
றுதல் மடந்தை - ஒரு ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண், மஞ்சனம்
குடைந்து ஆடி - நீரில் முழுகி விளையாடி, கஞ்ச நன் மலர் கடைந்து -
நல்ல தாமரைப்பூவைக் கிண்டி, அதன் மிசைக் கரம் வைத்தல் . அதன்மேல்
கை வைத்திருத்தல், என் முகம் தனைக் கண்டு - எனது முகத்தைக் கண்டு,
|