பக்கம் எண் :


196

துளும்பாது சஞ்சலம் தவிர் - கண்ணீர் துளும்பாமல் மனக்கவலை
யொழிவாயாக, அஞ்சல் - பயப்படாதே, என்று கை அமைப்பது நிகர்த்தல்
பார் - என்று கையால் அமர்த்து கின்றதைப்போல்வதைப் பார்ப்பாயாக.

     முகம் தன் ஐ - தன் : சாரியை; கஞ்ச மலர் : இருபெயரொட்டுப்
பண்புத்தொகை.

     'என் முகத்தைக் கண்டு அஞ்சாதே' எனத் தன் கையால் அச்சந்
தவிர்த்தல் போலத் தோன்றுகிறது. இது தற்குறிப்பேற்ற வணி.
                                                   (276)

 
  ஒரு பெண் கொண்டையில் மலர்கள் புனைந்திருப்பது   
381. கானி ரைப்பெரு நீழலின் வரும்ஒரு கன்னி
தேனி ரைத்தமென் சிகழிகை நறுமலர் தெரிவ
வானி ரைத்ததண் கருமுகில் இடைஇடை வயங்கி
மீனி ரைத்தன ஒப்பன காண்டியான் மின்னே.

     (இ - ள்.) மின்னே - மின்னல் போலும் சாயலையுடைய பெண்ணே!,
கான் நிரைப் பெரு நீழலின் வரும் ஒரு கன்னி - சோலையினது மர
வரிசையிலுள்ள பெரிய நிழலில் வருகின்ற ஒரு பெண்ணின், தேன் இரைத்த
மென் சிகழி கை - வண்டுகள் ஒலிக்கின்ற மென்மையான கொண்டையிலே,
நறு மலர் தெரிவ - மணம்பொருந்திய பூக்கள் தெரிவன, வான் நிரைத்த
தண் கரு முகில் இடை இடை வயங்கி - வானத்தில் ஒழுங்காகப்
பரவியிருக்கும் குளிர்ச்சி பொருந்திய கரு நிற மேகங்களின் மத்தியில்
மத்தியில் விளங்கி, மீன் நிரைத்தன ஒப்பன - நட்சத்திரங்கள் ஒழுங்காகப்
பரவிய தன்மையை ஒத்திருப்பன காண்டி - காண்பாய்.

     நீழல் : நீட்டல் விகாரம்; மென் சிகழி : பண்புத்தொகை; கரு முகில்
: பண்புத்தொகை; இடை இடை : அடுக்குப் பன்மைபற்றி வந்தது. ஆல் :
அசை. மின் : உவமையாகுபெயர். உவமையணி.

     கொண்டையினிடையே பல மலர்கள் புனைந்திருக்கும் காட்சி
மேகத்தினிடையே விண்மீன்கள் விளங்குவன போலத் தோன்றியது
என்பது.
                                                   (277)

 
     குவளை மலர் பலமுறை மூக்கிற் படுதல்   
382. பணைம லர்த்தட மூழ்குவா ணாசியிற் பலகால்
மணம றிந்திட வைத்தவிந் தீவிர மலர்தான்
இணைவி ழிக்குமுன் றோற்றிணக் குதற்கிசைந் தயலோர்
துணைபி டித்திதம் சொல்வது போல்வது தோகாய்.

     (இ - ள்.) தோகாய் - தோகையுடைய மயில்போலும் சாயலுடைய
பெண்ணே, பணை மலர்த் தடம் மூழ்குவாள் - பெருமை பொருந்திய
பூக்கள் நிறைந்துள்ள குளத்தில் மூழ்கும் பெண்களின், நாசியில் பலகால்
மணம் மறிந்திட வைத்த இந்தீவர மலர் - மூக்கில் பன்முறை மணம்
மாறிமாறிப் படும்படி செய்த குவளை மலரானது, தான் இணை விழிக்கு
முன் தோற்றி -