|
கலி
விருத்தம் |
2. |
பரிதி தன்மர பில்வரு பார்த்திபன்
விரித ரும்புகழ் மேவரிச் சந்திரன்
சரித மன்னுந் தமிழ்க்குத் துணைசெயக்
கரிமு கன்பதம் கைதொழு தேத்துவாம். |
(இ
- ள்.) பரிதி தன் மரபில் வரு பார்த்திபன்
- சூரிய குலத்தில்
தோன்றிய அரசனாகிய, விரி தரும் புகழ் மேவு அரிச்சந்திரன் - பரந்த
புகழ் பொருந்திய அரிச்சந்திரனது, சரிதம் மன்னும் தமிழ்க்குத் துணை
செய - சரித்திரம் பொருந்தியுள்ள இத்தமிழ்ச் செய்யுள் நூல் இடையூறின்றி
இனிது முடிதற்பொருட்டு, சரி முகன் பதம் கைதொழுது ஏத்துவாம் -
யானைமுகப் பிள்ளையாரின் திருவடிகளைக் கைகூப்பி வணங்குவாம்.
(2)
|
சிவபெருமான்
வணக்கம்
அறுசீர்க்கழிநெடில ஆசிரிய விருத்தம்
|
3. |
சீர்கொண்ட
செழுங்கமலத் திசைமுகனும் நெடுமாலும்
சிவனும் என்னப்
பேர்கொண்ட மூவுருவும் ஈருருவும் ஓருருவாய்ப்
பிறங்கும் தொல்லை
நீர்கொண்ட அண்டத்தும் தாவரத்தும் சங்கமத்தும்
நிறைந்து நின்றோன்
தார்கொண்ட தாளிணைகள் தழைகொண்ட அன்பினொடு
தலைமேற் கொள்வாம். |
(இ - ள்.) சீர்
கொண்ட செழுங் கமலத் திசை முகனும் நெடுமாலும்
சிவனும் என்னப் பேர் கொண்ட மூவுருவும் - சிறப்புப் பொருந்திய
செழுமையான தாமரைமலரிற் பிறந்த பிரமனும், உயர்ந்த வடிவங்கொண்ட
திருமாலும், சிவனும் என்ற முப்பெயர்களைக் கொண்ட திருவுருவமும்,
ஈருருவும் - சத்தி சிவமாகிய இரண்டு திருவுருவங்களைக்கொண்ட
அர்த்தநாரீசுர வடிவமும், தொல்லை ஓர் உருவாய்ப் பிறக்கும் -
பழைமையான ஒப்பற்ற அம்மையப்பர் திருவுருவோடு விளங்குகின்றவனும்,
நீர் கொண்ட அண்டத்தும் தாவரத்தும் சங்கமத்தும் நிறைந்து நின்றோன் -
கடலாற் சூழப்பட்ட உலகத்தும் நிலையியல் இயங்கியற் பொருள்களிலும்
நிறைந்துநின்றவனுமாகிய சிவபெருமானின், தார் கொண்ட தாளிணைகள் -
மாலையணிந்த இரண்டு திருவடிகளை, தழை கொண்ட அன்பினொடு
தலைமேற் கொள்வாம் - மேன்மேலும் பெருகுகின்ற அன்போடு தலைமேற் சூடிக்கொண்டு வணங்குவோம்.
|