பக்கம் எண் :


20

     (இ - ள்.) வீயும் வேங்கையும் மந்தியும் - பறவைகளையும்
புலிகளையும் குரங்குகளையும், மேதகு வீயும் வேங்கையும் மந்தியும் -
மேலான பூக்களையும் வேங்கை மரங்களையும் வண்டுகளையும், வீழ்
பலாக்காயும் - யாவரும் விரும்பத்தக்க பலாக்காய்களையும், பால் -
ஆற்றின் பக்கத்தில், அயில் - நீரைக் குடிக்க வரும், கை கயமும் கொடு
- துதிக்கைகளையுடைய யானைகளையும் வாரிக்கொண்டு, காயும் பாலையில்
வந்து கலந்தது - சுடுகின்ற பாலை நிலத்தில் சரயு ஆறு வந்து சேர்ந்தது.

     கொடு : தொகுத்தல் விகாரம். ஏகாரம் : ஈற்றசை. உம்மை எண்ணும்மை.

     வீயும் வேங்கையும் என்பதற்கு, இறந்த புலிகளையும் என்றும்
பொருள் கூறலாம். பால் - பக்கத்தினின்று. அயில் - (நீர்) பருகும்.
அயில் - ஐயில் என வந்தது போலி. மயல் - மையல் என வருவது
போன்றது. இதுவும் இரண்டடி மடக்கு.
                                                    (16)

31.

தேரு மாறுண ராச்சின வேடர்பேய்த்
தேரு மாறுமுட் டேறரும் பாலையில்
ஊரும் மாதரி யாரையும் உந்திமான்
ஊரும் மாதரி தாள்தொழு துற்றதே.

     (இ - ள்.) தேரும் ஆறு உணராச் சின வேடர் - தெளிந்த
நன்னெறி இன்னதென்றறியாது வழிப்பறி செய்யும் தொழிலினராகிய
சினத்தையுடைய வேடர்கள், பேய்த் தேரும் ஆறும் உள் தேறு அரும்
பாலையில் - கானலையும் ஆற்று வெள்ளத்தையும் தம்முள் பகுத்தறிய
முடியாத பாலை நிலத்தில், ஊரும் மாதர் யாரையும் உந்தி - ஊர்களையும்
மகளிர் எல்லாரையும் தள்ளிக்கொண்டு, மான் ஊரும் மாதரி தாள்
தொழுது உற்றது - கலைமானை ஊர்தியாக்கொண்ட துர்க்கையின்
திருவடிகளைத் தொழுது வந்து சேர்ந்தது.

     பேய்த்தேர் - கானல். உள் + தேறு + அரும் = உட்டேறரும். மாதர்
+ யாரையும் = மாதரியாரையும். மாதரி - துர்க்கை. கானல் என்பது சூரியன்
வெயிலின் தோற்றத்தால் நீரில்லா இடங்களில் நீர் போலத் தோன்றும்
இடம், "கானலை நீரென் றெண்ணிக் கடுவெளி திரியு மான்போல்" என்று
கூறுவதும் காண்க. இதுவும் இரண்டடி மடக்கு.
                                                    (17)

         முல்லையில் சரயு ஆறு  
32. இறவங் கோங்கம் இருப்பையின் பூந்துணர்
இறவங் கோங்க எரிமின் மினிஎனப்
புறவ மேய்ந்த சுரம்விட்டுப் போய்ச்செழும்
புறவ மேய்ந்தது பூம்புனல் ஆறரோ.

     (இ - ள்.) பூம் புனல் ஆறு - அழகிய சரயு ஆறு, அம்
கோங்கம் இருப்பையின் பூந்துணர் இற - அழகிய கோங்கு மரம்
இருப்பை மரங்களின் பூங்கொத்துகள் ஒடியவும், இறவு அங்கு ஓங்க -
இறால் மீன்கள்