அவ்வாற்றில் துள்ளி
எழவும், எரி மின்மினி என - ஆறு பாய்வதால்
தீப்போன்ற கானலின் வெப்பம் மின்மினி போலக் குளிர்ந்து தோன்ற,
புறவம் மேய்ந்த சுரம் விட்டுப்போய் - புறாக்கள் மேய்ந்த பாலைநிலத்தை
விட்டுப்போய், செழும் புறவம் ஏய்ந்தது - செழிப்பான முல்லை நிலத்தில்
பொருந்தியது.
அரோ
: அசை; பூந்துணர் : இரண்டாம் வேற்றுமைத்தொகை; பூம்
புனல் : பண்புத்தொகை; புறா, புற எனக் குறைந்து அம் சாரியை பெற்றுப்
புறவம் என நின்றது. இறா என்பது இற என நின்றது. இறவு எனக்
கொள்ளினும் பொருந்தும். இதுவும் இரண்டடி மடக்கு.
(18)
33. |
ஆடு மாசுரை
யாவிடை யாழநீர்
ஆடு மாசுரை யாவிடை யோடவே
கோடு குத்திக் குலைத்தது கொன்றையின்
கோடு குத்திக் குலைத்துணர் வாரியே. |
(இ - ள்.)
ஆடும் மாசு உரையா இடை ஆழம் நீர் - நீராடுதற்
குரியதும் குற்றம் சொல்லப்படாததும் நடுவில் ஆழமுடையதும் ஆகிய சரயு
ஆற்றின் நீரானது, ஆடு மாசுரை ஆ விடை ஓட - ஆடுகளும் பெரிய
மடியுடைய பசுக்களும் எருதுகளும் பயந்து ஓடும்படி, கொன்றையின் கோடு
உகுத்து - கொன்றை மரங்களின் கிளைகளை முறித்து, இக் குலைத்துணர்
வாரி கோடு குத்திக் குலைத்தது - இந்தக் கொன்றைக்காய்க்
கொத்துகளையும் துளிர்களையும் அரித்துச் சேர்த்துக் கொண்டு கரைகளை
மோதி அழித்தது.
ஏகாரம் :
ஈற்றசை. சுரை - பால் சுரக்கும் மடி, ஆ-பசு. விடை -
காளைமாடு. கோடு - மரக்கிளை. கோடு - கரை. இ + குலை = இக்குலை.
இது கொன்றைமரத்தைச் சுட்டியது. துணர் - பூங்கொத்து. இதுவும்
இரண்டடி மடக்கு.
(19)
|
முல்லையில்
சரயு ஆறு திருமாலை ஒத்திருந்தது |
34. |
அண்டர்
தோயலை வாரி மராவழீஇ
அண்டர் தோயலை வாரியிற் சார்ந்தணி
கொண்ட லைத்தரிக் குங்குருந் திற்கலை
கொண்ட லைத்தரிக் கொத்த குடிஞையே.
|
(இ
- ள்.) குடிஞை
- அந்தச் சரயு ஆறானது, அண்டர் தோயலை
வாரி - ஆயரது தயிரை அள்ளிக்கொண்டு, மரா அழீஇ - மராமரத்தை
அழித்து, அண்டர் தோய் அலை வாரியில் சார்ந்து - தேவர்கள்
முழுகுகின்ற அலைகளையுடைய கடலில் போய்ச் சேர்ந்து, அணி
கொண்டலைத் தரிக்கும் குருந்தில் கலை அலைத்துக்கொண்டு - அழகான
மேகத்தைத் தங்கச் செய்கின்ற குருந்த மரத்தில் ஆய்ச்சியருடைய
ஆடைகளை அடித்துக்கொண்டு தொங்கச்செய்து, அரிக்கு ஒத்த -
கண்ணனை ஒத்திருந்தது.
அரிக்கு ஒத்தது
: நான்கனுருபு இரண்டன் பொருளில் வந்த உருபு
மயக்கம். அழீஇ : சொல்லிசை யளபெடை. ஒத்தது என்பதில் துவ் விகுதி
|