பக்கம் எண் :


22

குறைந்துநின்றது. தொகுத்தல் விகாரம். திருமால் கண்ணனாகப் பிறந்தபோது
கோவியர் தயிரை வாரினார்; குருந்த மரத்திற் கோவியர் சேலைகளைக்
கவர்ந்து கொண்டுபோய்த் தூக்கினார். அது போலச் சரயுவாறும் செய்தது.
இராமனாகப் பிறந்தபோது ஏழு மரா மரங்களை யழித்தார். அதுபோலச்
சரயு நதியும் அழித்தது. திருமால் திருப்பாற்கடலிற் சேர்ந்திருந்தார்.
அதுபோலச் சரயுவும் கடலிற் சேர்ந்தது. இவை யாவும் திருமால்
செயலேயாதலால் அரிக்கொத்த குடிஞையே என்றார். இது திருமாலுக்கும்
சரயு நதிக்கும் ஒப்புக் கூறியது. இஃது இரண்டடி மடக்கும் சிலேடையும்
இயைந்தது.
                                                    (20)

சரயு ஆற்றின் திருமால் வணக்கம்
35. உறவ ணங்கு மராவு முழக்கிவான்
உறவ ணங்கு மராவும் ஒசித்தது
மறைவ ணங்கு மரியை வணங்கல்போல்
மறைவ ணங்கு மரியை வணங்கியே.

     (இ - ள்.) (சரயு நதியானது) மறைவு அண் நம் குமரியை வணங்கி
- எங்கும் கரந்து நிறைந்திருக்கும் நமது துர்க்கையை வணங்கி, மறை
வணங்கும் அரியை வணங்கல் போல் - நான்கு வேதங்களும் பணியும்
பணியும் திருமாலை வழிபடுவது போல, உற அணங்கும் அராவும் உழக்கி
-- மிகவும் வருத்துகின்ற பாம்புகளையும் இழுத்துக் கலக்கி, வான் உற
வணங்கும் மராவும் ஒசித்தது - வானம் வரையுயர்ந்து வளைந்து நிற்கும்
மராமரங்களையும் முறித்தது.

     "மான் ஊரும் மாதரி தாள் தொழுது உற்றது" (17) என முன் கூறியதை
மறைவு அண் நங் குமரியை வணங்கி என வழி மொழிந்தார். பாலைநிலத்
தெய்வமாகிய துர்க்கையைப் பாலையில் வணங்கிப் பின் முல்லை
நிலத்தெய்வமாகிய மாயோனை இங்கு வணங்கி மருதஞ் செல்கின்றது
என்பது. "அரியை வணங்கல் போல் அவன் செய்த திருவிளையாடல் சில
செய்தது" என்றார். அராவை உழக்கியது கண்ணன் செயல்; மராமரம்
ஒசித்தது இராமன் செயல். இவ்விரு செயல்களும் புரிந்தது திருமாலை
வணங்குவது போலத் தோன்றிற்று என்பது கருத்து. சரயு என்னும் எழுவாய்
அதிகாரத்தால் வருவிக்கப்பட்டது. சரயு ஓசித்தது என வினை முடிக்க.
                                                    (21)

 
    சரயு ஆறு மருதஞ் சார்தல்    
36. ஆவி அன்ன பெடைகளும் அன்றிலும்
தூவி அன்னமும் துன்னிய நாரையும்
மேவி இன்பம் விடாத நெடும்புனல்
வாவி சூழும் மருதம் புகுந்ததே.

     (இ - ள்.) (சரயு நதியானது) ஆவி அன்ன பெடைகளும்
அன்றிலும் - ஈருடம்பில் ஓர் உயிர்போல் பிரியாது வாழ்கின்ற
அன்றில்களும் பேடுகளும், தூவி அன்னமும் துன்னிய நாரையும் - மென்மையான இறகுகளையுடைய அன்னங்களும் ஒன்றோடொன்று
நெருங்கிய நாரைகளும், மேவி - தத்தம்