துணைகளைப் பிரியாது
பொருந்தி, இன்பம் விடாத - ஒருபோதும்
புணர்ச்சியின்பம் நீங்காத, நெடும் புனல் வாவி குழும் மருதம் புகுந்தது
- நீர் நிறைந்த குளங்கள் சூழ்ந்த மருத நிலத்தில் புகுந்தது.
இணைபிரியாத
புள்ளினங்கள் மகிழ்ந்து வாழ்கின்ற நிறைநீர்க்
குளங்கள் தம்மைம் காணும் மக்களுக்கும் மனமகிழ்ச்சி அளிக்கின்றன.
நாட்டு வளம் உடல் நலத்தோடு மனநலனும் அளிக்கும் மாண்பு காண்க.
(22)
37. |
வாழை பூகம்
மகிழ்மரு தாசினி
தாழை கேசரம் சம்பகம் சன்மலி
ஞாழன் மாதுளை நாகம் மலிந்ததன்
சூழல் சேரத் தொலைத்தது தோயமே. |
(இ - ள்.)
தோயம் - சரயு ஆற்றின் நீரானது, வாழை பூகம் மகிழ்
மருது ஆசினி தாழை கேசரம் சம்பகம் சன்மலி ஞாழல் மாதுளை நாகம் மலிந்த - வாழை கமுகு
மகிழமரம் மருதமரம் ஈரப்பலாமரம் தென்னை
பூந்தாது நிறைந்த சண்பகமரம் இலவமரம் குங்குமமரம் மாதுளைமரம்
புன்னைமரம் முதலிய மரங்கள் நிறைந்த, தன் சூழல் சேரத் தொலைத்தது
- மருதநிலத்தின் எப்பக்கமும் ஒருங்குசேர அழித்தது.
வாழை முதலிய மரங்கள் நிறைந்த இடங்களெல்லாம்
நீர் பெருகி
மரங்களையும் முறித்து இடங்களையும் பாழ் படுத்தியது என்க. நீரும்
சேறுமாய் நிழலில் அமர்ந்திருக்கத் தகாதவாறு இடத்தைக்கொடுத்தது
என்பது கருத்து.
(23)
|
சரயு
ஆறு கால்கள் வழியாகக் குளங்களிற் புகல் |
38. |
பால்கள்
தோறும் பரந்து செறிந்தவக்
கால்கள் தோறும் கலந்த கடும்புனல்
வால்கள் தோய்மகி டம்புக வான்படச்
சேல்கள் பாயும் செழுந்தடம் புக்கதே. |
(இ
- ள்.) பால்கள்
தோறும் பரந்து - மருதநிலத்தின் இடங்களி
லெல்லாம் பரவி, செறிந்த அக் கால்கள்தோறும் கலந்த கடும் புனல் - பல
இடங்களிலும் நிறைந்துள்ள அந்த அந்த வாய்க்கால்களிலெல்லாம் போய்ச்
சேர்ந்த வேகமான சரயு ஆற்று நீரானது, வால்கள் தோய் மகிடம் புக
வான் படச் சேல்கள் பாயும் செழுந்தடம் புக்கது - வால்கள் தண்ணீரில்
தோயும்படி எருமைகள் உள்ளே புகவும் கெண்டை மீன்கள் மேகங்களைத்
தொடும்படி உயர்ந்து பாய்கின்ற செழிப்பான குளங்களிற் புகுந்தது.
வான்
படச்சேல்கள் பாயும் : உயர்வுநவிற்சியணி. செழுந்தடம் :
பண்புத்தொகை. புகு : பகுதி. பகுதி ஒற்று இரட்டித்து இறந்த காலங் காட்டியது. அ : சாரியை.
து : ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.
ஏகாரம்
: ஈற்றசை.
(24)
|