பக்கம் எண் :


201

          உடல் புளகம்
391.

உறுதல் செயிர்அ றப்புனல் தேக்கிடக் காமத்தண்
பயிர்மு ளைத்தெழும் பான்மைஇ தாம்என
உயிர்ந லக்கொடி ஒண்ணுதல் வண்ணமெய்ம்
மயிர்பொ டிப்புற் றரும்பிம லர்ந்தவே.

     (இ - ள்.) செயிர் அறப் புனல் தேக்கிட - குற்றம் நீங்க நீரை
நிரப்புதலினால், காமத் தண் பயிர் முளைத்து எழும் பான்மை இதாம் என
- காமமாகிய குளிர்ந்த பயிர் முளைத்து எழுகின்ற தன்மை இதுவாம் என்று
கூறும்படி, உயிர் நலக் கொடி ஒண்ணுதல் - அரிச்சந்திரனுக்கு
உயிர்போன்ற நலத்தையுடைய பூங்கொடிபோன்ற ஒளிபொருந்திய
நெற்றியையுடைய சந்திரமதியின், வண்ண மெய் - அழகிய உடம்பில், மயிர்
பொடிப்புற்று - உரோமஞ் சிலிர்த்து, அரும்பி மலர்ந்த - புளகம் தோன்றி
மலர்ந்தது.

     சந்திரமதி சூற்கொண்டதால் காமப்பயிர் வளர்ந்து நிற்குமாறு
மெய்ம்மயிர் புளகரும்பி நின்றது என்க.
                                                   (287)

      சூற்குறிகள் தோன்றுதல்
392. நிலைம யிர்க்கண் குருக்கொண்டு நீள்கரும்
கொலைம தர்க்கண் குழிந்து குளிர்முகம்
கலைநி லாவின்வி ளர்த்துக்க திர்மணி
முலைமு கங்கள்க றுப்புமு திர்ந்தவே.

     (இ - ள்.) நிலை மயிர்க்கண் குருக்கொண்டு - உடம்பில்
நிலைபெற்றுள்ள மயிர்க்கால்களெல்லாம் சிலிர்க்கப்பெற்று, நீள் கரும்
கொலை மதர்க்கண் குழிந்து - நீண்ட கருமையாகிய நோக்கால் துன்
புறுத்துகின்ற மதர்த்த கண்கள் குழிந்து பள்ளமாய், குளிர் முகம் -
குளிர்ந்த முகமானது, கலை நிலாவின் விளர்த்து - கலைகளையுடைய
சந்திரனைப்போல் வெண்மையாகி, கதிர் மணி முலை முகங்கள் - ஒளி
பொருந்திய நீலமணிபோன்ற முலைக்காம்புகள், கறுப்புமுதிர்ந்த - கறுப்பு
மிகுவதாயின.

     ஏகாரம் : ஈற்றசை; மெய்ம்மயிர் சிலிர்த்தலும் கருவிழி யுட்குழிதலும்,
முகம் வெளுத்தலும், கொங்கைக்கண் கறுத்தலும் கருப்பக் குறிகள் ஆம்.
                                                   (288)

 
            சூன் முதிர்தல்
393. தொடைம லர்க்குழல் சோர்ந்து செழுந்துகில்
உடைநெ கிழ்ந்துபை யப்பைய ஒல்கியே
நடைபெ யர்ந்து நரம்புப சத்தவா
இடைஉண் டென்றறி யப்பட்டதி யார்க்குமே.

     (இ - ள்.) தொடை மலர்க்குழல் சோர்ந்து - தொடுக்கப்பட்ட
பூக்களை அணிந்த கூந்தல் அவிழ்வதாகி, செழுந் துகில் உடை
நெகிழ்ந்து -