பக்கம் எண் :


202

செழுமையாகிய பட்டாடை குலைந்து, பையப்பைய ஒல்கி - மெள்ள
மெள்ளத் துவண்டு, நடைபெயர்ந்து - நடை நடந்து, நரம்பு பசத்தவா -
நரம்புகள் பச்சைநிறம் உடையனவாய், இடை உண்டு என்று -
சந்திரமதிக்கு இடை ஒன்று இருக்கிறதென்று, யார்க்கும் அறியப்பட்டது
- கருத்தரித்த அக் காலத்தில்தான் எல்லோர்க்கும் தெரியவந்தது.

     பையப் பைய : அடுக்குத்தொடர்; இடைவிடாமைமேற்று,

     ஏகாரம் : அசை. பட்ட தியார்க்கும் : குற்றியலிகரம்.

     கூந்தல் சோர்ந்தது, உடை நெகிழ்ந்தது, நடைதளர்ந்தது, நரம்பு
பசந்தது, இடை பருத்து எல்லார்க்கும் தோன்றிற்று. இவை சூல் வரவர
வளர்ந்து முதிர்ந்தது என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆம்.
                                                   (289)

 
        ஆண்மகப் பேறு
394. பாங்கி மார்இரு பக்கமும் நின்றுகை
தாங்கி முன்செலத் தான்நடந் தொல்கியே
வாங்கு திங்கள் நிறைந்தபின் பாயிழை
தீங்கி லாமல் சிறுவனைப் பெற்றனள்.

     (இ - ள்.) பாங்கிமார் - தோழிமார்கள், இருபக்கமும் நின்று
கைதாங்கி முன் செல - இரண்டு பக்கங்களிலும் நின்று கையைப்
பிடித்துக்கொண்டு முன்னே போக, தான் நடந்து ஒல்கி - தானும் பின்னே
நடந்துபோய்த் தளர்ந்திருந்து, ஆங்கு திங்கள் நிறைந்த பின்பு - அவ்வாறு
பத்துத் திங்கள் நிறைந்த பிறகு, ஆயிழை தீங்கு இலாமல் சிறுவனைப்
பெற்றனள் - ஆராய்ந்தெடுக்கப்பட்ட ஆபரணங்களை யணிந்த சந்திரமதி
யாதொரு கேடும் இன்றி ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.

     ஆயிழை : அன்மொழித்தொகை. பெறு : பகுதி; அன் : சாரியை;
அள் : பெண்பால் வினைமுற்று விகுதி; பகுதி ஒற்று இரட்டித்து
இறந்தகாலங் காட்டியது. ஒல்கியே

     ஏகாரம் : அசை. சூல் முதிர முதிரத் தானே நடக்க முடியாது
பாங்கியர் கைதாங்கிச் செல்ல நடந்து களைத்து இளைத்து இருந்தனள்
எனக் கொள்க.
                                                   (290)

 
       அரிச்சந்திரன் மகிழ்ச்சி
395.

பிள்ளை வந்து பிறந்தனன் என்றலும்
வள்ளல் உள்ளம் மகிழ்ந்திர வோர்க்கெலாம்
அள்ளி நீர்அறை யைத்திறந் தேழுநாள்
கொள்ளை கொண்மின் எனக்கொடுத் தானரோ.

     (இ - ள்.) பிள்ளை வந்து பிறந்தனன் என்றலும் - ஆண்மகவு
வந்து பிறந்தான் என்று தோழியர் சொன்னவுடனே, வள்ளல் - இடையெழு
வள்ளல்களில் ஒருவனாகிய அரிச்சந்திரன், உள்ளம் மகிழ்ந்து - மனம்
மகிழ்ந்து, இரவோர்க் கெலாம் - ஏற்போர் யாவர்க்கும், நீர் அறையைத்