திறந்து ஏழு நாள்
அள்ளிக் கொள்ளை கொண்மின் - நீங்கள்
பண்டாரத்தைத் திறந்து ஏழு நாட்களுக்கு உங்களுக்கு வேண்டிய அளவு
அள்ளிக் கொள்ளைகொள்ளுங்கள், எனக் கொடுத்தான் - என்று உத்தரவு
கொடுத்தான்.
அரோ
: அசை, எலாம் : தொகுத்தல்; கொண்மின்: முன்னிலைப்
பன்மை வினைமுற்று. அரிச்சந்திரன் இடை ஏழு வள்ளல்களில் ஒருவன்.
முதல் ஏழு வள்ளல்கள் : குமுணன், சகரன், செம்பியன், துந்துமாரி, நளன்,
நிருதி; இடை எழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், அரிச்சந்திரன்,
கன்னன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன்; கடை எழு வள்ளல்கள் :
எழிலி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையமான்.
(291)
|
பிற
மாதர் மகிழ்ச்சி
|
396. |
மதலை
வந்து பிறந்த மகிழ்ச்சியால்
திதலை அல்குல்நல் லார்தெரு எங்கணும்
பதலை தோறும் பனிநீர் புழுகுநெய்
குதலை மாதர் கொணர்ந்து சொரிந்தனர். |
(இ - ள்.)
மதலை வந்து பிறந்த மகிழ்ச்சியால் - ஆண்மகவு
பிறந்த மனமகிழ்வால், திதலை அல்குல் நல்லார் தெரு எங்கணும் -
தேமல் படர்ந்த அல்குலையுடைய பெண்கள் இருக்கிற தெருவில்
எல்லாரும், பதலை தோறும் - பானைகளில் எல்லாம், பனி நீரும் - பனி
நீரும், புழுகு நெய் - புழுகும் வாசனை நெய்யும், குதலை மாதர்
கொணர்ந்து சொரிந்தனர் - மழலை மொழி பேசுகின்ற பெண்கள்
கொண்டுவந்து ஊற்றினார்கள்.
எங்கணும் : உம்மை முற்றும்மை. மங்கையர் எல்லாரும்
தம்
அரசனுக்கு ஆண்மகவு பிறந்ததென்ற மகிழ்ச்சியால் பனி நீர், புனுகு, நெய்
முதலிய மணப்பொருள்களைக் கொண்டுவந்து மறுகு தோறும் தெளித்து
மணம் பரப்பினர் என்க.
(292)
397. |
தொட்டி
தாழிக டோணிக டாரங்கண்
மட்டி லாதம றுகுதொறு மிரீஇ
விட்ட மஞ்சனம் வீதிஎ லாம்கடை
கட்டி வைத்தபின் கன்னியர் கூடினார். |
(இ
- ள்.) தொட்டி தாழிகள் தோணி கடாரங்கள் - மரத்
தொட்டிகளும், பெரிய தாழிப்பானைகளும், தோணிபோன்ற கடாரப்
பாத்திரங்களும், மட்டிலாத மறுகு தொறும் இரீஇ - அளவற்ற
தெருக்கள்தோறும் வைத்து, விட்ட மஞ்சனம் - ஊன்றிவைத்த திரு
மஞ்சன நீர், வீதி எலாம் கடை கட்டி வைத்தபின் - தெருக்களில்
எல்லாம் எவ்விடங்களிலும் அமைத்த பின்பு, கன்னியர் கூடினார் -
நீராடப் பெண்கள் கூடினார்கள்.
இரீஇ
: சொல்லிசை யளபெடை; எலாம் : தொகுத்தல்; மறுகு
தோறும் திருமஞ்சனம் குடம் பானை முதலிய கலங்களில் நிரப்பி
வைத்தனர் என்பது.
(293)
|