அந் நகரத்தில் வாழும்
மைந்தரும் மங்கையரும் அரிச்சந்திரனும்
சந்திரமதியும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பாற்கடலில் அமுதந்
தோன்றியபோது இந்திரன் அடைந்த மகிழ்ச்சிபோன்றது அது என்பது.
(303)
408. |
மேலி
னோர்தம் விதரண மும்தனிக்
கோலி னோர்தம் குணமும் குலமனு
நூலின் வந்து நுணங்கிய கேள்வியும்
பாலி னோடு கலந்து பருக்கினார். |
(இ
- ள்.) மேலினோர்
தம் விதரணமும் - மேன்மக்களுடைய
அறிவும், தனிக் கோலினோர் தம் குணமும் - ஒப்பற்ற செங்கோல்
செலுத்தும் அரசருடைய குணமும், மனு குல நூலில் - மனுகுல நீதியில்,
வந்து நுணங்கிய கேள்வியும் - வந்த மிக நுட்பமான கேள்வி ஞானமும்,
பாலினோடு கலந்து பருக்கினார் - ஆகிய இவற்றைப் பாலோடு கலந்து
மைந்தனுக்கு ஊட்டினார் (தாய் தந்தையர்.)
இளமைப்
பருவத்திலேயே நல்லறிவும் கல்வி கேள்வியும்
உண்டாகும்படி பாலூட்டி வளர்த்தார்கள் என்க. பருகு + என்னும் பகுதி
பருக்கு எனப் பிறவினையாகி இன் + ஆர் என்ற இடைநிலையும் விகுதியும்
பெற்று, பருக்கினார் என முடிந்தது; உருக்கினார் என்பது போல.
பருக்கினார் - உண்பித்தார், ஊட்டினார்.
(304)
முனிவர்
குமரனை வாழ்த்தித் 'தேவதாசன்'
என்று பெயர் சூட்டல்
409. |
ஆவ
லின்அரிச் சந்திரன் மைந்தனை
மூவர் அன்ன முனிவர்கள் வாழ்த்தியே
யாவ ரும்நிக ரல்லவற் கேற்றிடத்
தேவ தாசன் எனப்பெயர் செப்பினார்.
|
(இ
- ள்.) மூவர் அன்ன முனிவர்கள் - அயன் மால் உருத்திர
ராகிய மும்மூர்த்திகளை ஒத்த முனிவர்கள். ஆவலின் அரிச்சந்திரன்
மைந்தனை வாழ்த்தி - விருப்பத்தோடு அரிச்சந்திரனுடைய மகனை
வாழ்த்தி, யாவரும் நிகரல்லவற்கு - எவரும் ஒப்பாகாத அப் புத்திரனுக்கு,
ஏற்றிட - பொருத்தமாக, தேவதாசன் எனப் பெயர் செப்பினார் -
தேவதாசன் என்று பெயரிட்டுக் கூப்பிட்டார்கள்.
யாவரும் : முற்றும்மை. அவன் + கு - அவற்கு. செப்பினார் :
திசைச்சொல். மூவரை யொத்த முனிவர்கள் வந்து கண்டு வாழ்த்திப் பின்
தேவதாசன் என்று பெயரிட்டுச் சென்றனர் என்க.
(305)
|
பிள்ளைக்கு
அணிகலன்கள் அணிதல் |
410. |
பொலன்கொள்
காப்புப் புலியுகிர்த் தண்டைமுத்
தலங்கள் கிண்கிணி ஐம்படை ஆழிகள்
இலங்கு பொன்னரை ஞாண்இவை சாத்தியே
துலங்கு மாமணித் தொட்டிலில் ஏற்றினார். |
(இ - ள்.)
பொலன் கொள் காப்பு - பொன்னால்செய்த காப்பும்,
புலி உகிர் - புலி நகமும், தண்டை - தண்டையும், முத்து அலங்கல் -
முத்துமாலையும், கிண்கிணி - பாதச்சதங்கையும், ஐம்படைத் தாலியும் -
திருமாலின் ஐந்தாயுதங்கள்போல் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட
கழுத்தணியும், ஆழிகள் - மோதிரங்களும், இலங்கு பொன் அரை ஞாண்
- விளங்குகின்ற தங்க அரை ஞாணும், இவை சாத்தி - ஆகிய
இவைகளைச் சாத்தி, துலங்கு மாமணித் தொட்டிலில் ஏற்றினார் -
விளங்குகின்ற சிறந்த மாணிக்கத் தொட்டிலில் ஏற்றினார்கள்.
ஏகாரம் :
அசை, மாமணி : உரிச்சொற்றொடர். காப்பு முதலிய
கலன்கள் அணிந்து நன்னாளில் தொட்டிலேற்றி யாட்டினர் என்க.
(306)
411. |
சூழு
மாமணித் தொட்டிலி லேற்றியே
தாழு நீள்குழல் தாதியர் போற்றயாண்
டேழு புக்கன னிவ்வகை காதலன்
வாழு நாளினில் வந்தவை கூறுவாம். |
(இ
- ள்.) சூழும் மாமணி தொட்டிலில் ஏற்றிட - சுற்றிலும்
பெருமைபொருந்திய ஒன்பதுவகை மணிகள் பதித்துச் செய்யப்பட்ட
தொட்டிலில் தேவதாசனையேற்றி யமர்த்தி, தாழும் நீள் குழல் தாதியர்
போற்ற - தாழ்ந்து நீண்ட கூந்தலையுடைய பாங்கிமார் பாராட்டி வளர்க்க
வளர்ந்து, யாண்டு ஏழு புக்கனன் - ஏழாண்டுப் பருவத்தையடைந்தனன்,
இவ்வகை காதலன் வாழும் நாளினில் - இவ்வாறு மைந்தன் தேவதாசன்
வாழுங்காலத்தில், வந்தவை கூறுவாம் - அரிச்சந்திரன் சந்திரமதியாகிய
இருவர்க்கும் நிகழ்ந்த செயல்களை இனிமேற் கூறுவோம்.
மாமணி சூழும் என மாற்றினும் அமையும். மணித்தொட்டில் :
மணிகளைப் பதித்துச் செய்யப்பட்ட தொட்டில் என விரித்துக் கொள்க.
அல்லது மணிகளால் விளங்குந் தொட்டில் என்று விரிக்க. யாண்டு ஏழு
வரை தொட்டிலில் ஏற்றிப் போற்றினர் என்பது செல்வப் பெருமையை
விளக்கிற்று. தேவதாசன் வயது ஏழு அடையும் வரை நலமுற வாழ்ந்தனர்
என்பது குறிப்பு.
(307)
|