|
அமராவதி
நகர்ச் சிறப்பு |
415. |
மாட
மண்டபம் மேடை மாமதில்
வாயில் ஞாயில் கபாடநீள்
கூட கோபுரம் நீடு மாளிகை
கோல வேதிகை ஆலயம்
நாட கம்பயில் சாலை சூளிகை
நாவ லங்கனி யூறல்பாய்
ஆட கம்கொ டமைத்து மாமணி
யாலநி றைத்த அனந்தமே. |
(இ
- ள்.) மாட மண்டபம் மேடை மாமதில் வாயில் ஞாயில்
கபாடம் நீள் கூட கோபுரம் நீடு மாளிகை கோல வேதிகை ஆலயம் -
மாடங்களும் மண்டபங்களும் மேடைகளும் பெரிய மதில்களும்
வாயில்களும் மதில் உறுப்புகளும் கதவுகளும் நீண்ட கூடங்களும்
கோபுரங்களும் உயர்ந்த மாளிகைகளும் அழகிய திண்ணைகளும்
கோயில்களும், நாடகம் பயில் சாலை - நாடகம் ஆடுகிற
நாடகசாலைகளும், சூளிகை - சிகரங்களும், நாவலம் அம் கனி ஊறல்
பாய் - நாவற்கனியானது இரதம் பாய்கின்ற, ஆடகம் கொடு அமைத்து -
சாம்பூநதம் என்னும் பொன்னால் அமைத்து, மா மணியால் நிறைத்த
அனந்தம் - பெரிய மாணிக்கக்கற்கள் பதிக்கப்பெற்ற இவைகள் ஒவ்வொரு
வகையும் எண்ண முடியாதனவாம்.
மா மதில்: உரிச்சொற்றொடர், கூட கோபுரம்: உம்மைத்தொகை;
ஏகாரம் :
ஈற்றசை. நாவற்கனிச்சாறு பாய்கின்ற இடத்திலே
தோன்றியதனால் சாம்பூநகம் எனப் பெயர்பெற்றது. அதுவே உயர்ந்தது.
ஆடகம், கிளிச்சிறை, சாதரூபகம், சாம்பூநதம் என்று நால்வகைப் பொன்
என அறிக.
(4)
416. |
வேத
சாலையும் யாக சாலையும்
யோக சாலையும் மின்னனார்
கீத சாலையும் நாத மேதரு
கின்னரம் பயில் சாலையும்
காத லானவர் யாவரும் தொடர்
காம சாலையும் மாபலிப்
பூத சாலையும் மாறி லாஅனு
போக சாலையும் ஊர்எலாம்.
|
(இ
- ள்.) வேத சாலையும் யாக சாலையும் யோக சாலையும் -
வேத சாலைகளும் யாக சாலைகளும் யோகம் பயிலிடங்களும், மின்
அனார் கீத சாலையும் - மின் போன்ற பெண்கள் சங்கீதம் பயில்கிற
சாலைகளும், நாதமே தரு கின்னரம் பயில் சாலையும் - இசையைத்
தருகின்ற கின்னரம் என்னும் கருவி பழகுகிற சாலைகளும், காதலானவர்
யாவரும் தொடர் காம சாலையும் - காதலர் எல்லோரும் ஒருவரை
ஒருவர் தொடர்ந்து செல்லத்தக்க காம சாலைகளும், மாபலி பூத
சாலையும் - பெரும் பூசை செய்யத்தக்க
|