பூதசாலைகளும், மாறு
இலாத அனு போக சாலையும் - மாறுபாடிலாத
சுகங்களை அனுபவிக்கும் இடங்களும், ஊர் எலாம் - அமராவதி நகர
மெங்கணும் நிறைந்துள்ளன.
எலாம்:
தொகுத்தல்; உம்மை: எண்ணும்மைகள். மாபலி:
உரிச்சொற்றொடர். கின்னரம் : இசைக்கருவியி னொன்று. (யாழ்
போன்றது.)
(5)
417. |
உயிர்
எனத்தகும் அன்பர் தம்உடன்
உம்பர் மங்கையர் இன்பம்என்
பயிர்வி ளைத்திடும் அவுணர் உற்றுறை
பதும ராகம் இலங்குவ
செயிர்வி ளைத்திடும் அவுணர் உற்றுறை
திரிபுரத் தழல் ஒக்குநீள்
வயிர முத்தொளி விரிவ தப்புறம்
மண்டு வெண்புகை ஒக்குமே. |
(இ - ள்.)
உயிர் எனத் தகும் அன்பர்தம் உடன் - தங்களுக்கு
உயிர் என்று சொல்லத்தக்க நாயகருடன், உம்பர் மங்கையர் இன்பம் என்
பயிர் விளைத்திடும் - தேவகன்னியர் இன்பப்பயிரை விளைக்கிற,
மனைதொறும் - வீடுகளில் எல்லாம், பல பதுமராகம் இலங்குவ - பதுமராக
மணி பல ஒளிர்வன, அவை செயிர் விளைத்திடும் அவுணர் - துன்பத்தை
உண்டாக்குகிற அசுரர், உற்று உறை திரிபுரத்து அழல் ஒக்கும் -
பொருந்தி வாழ்கின்ற முப்புரத்தில் பற்றிய நெருப்புப் போல்வன, நீள்
வயிரம் முத்து - அவ்வீடுகளில் மிகுந்த வயிரங்களும் முத்துகளும், ஒளி
விரிவது - ஒளி பரப்புவது, அப்புறம் மண்டு வெண்புகை ஒக்கும் -
முப்புரத்தழலுக்கு வெளியே மண்டிய வெண்மையான புகை போன்று
தோன்றும்.
பதுமராகம் தீப்போன்று ஒளிவிடும்; வயிரமும் முத்தும்
மங்கலான
ஒளியாய் அத்தழலிற்றோன்றிய வெண் புகையை யொக்கும். இது
உவமையணி.
(6)
418. |
அரவு
மிழ்ந்தசெ மணியும் ஆரமும்
அணிகொள் இந்திர நீலமும்
பரவு கின்ற மதிற்பு றத்த
பரப்ப னைத்தும் அழுத்தின
நிரவி டும்பல திசைஅ டங்கலும்
நிமிர்கொ ழும்சுடர் விரிதலால்
இரவு முண்டிள நிலவும் உண்டெறி
வெயிலும் உண்டொரு பொழுதினே. |
(இ
- ள்.) பரவுகின்ற மதில் புறத்த பரப்பு அனைத்தும் - பரந்த
மதிலின் வெளிப்பரப்பு முழுவதிலும், அழுத்தின அரவு உமிழ்ந்த
செம்மணியும் ஆரமும் - அழுத்தப்பட்ட செந்நிறமான நாகரத்தினங்களும்
முத்துகளும், அணிகொள் இந்திர நீலமும் - அழகிய இந்திரநீலக்
கற்களும்,
|