நிரவிடும் பல திசை
அடங்கலும் - நிரம்பிய பல திக்குகள் எல்லாம், நிமிர்
கொழுஞ் சுடர் விரிதலால் - ஓங்கி உயர்ந்த பேரொளி பரப்புதலால், ஒரு
பொழுதின் - ஒரே காலத்தில், இரவும் உண்டு இளநிலவும் உண்டு -
இரவும் நிலவும் இருந்ததோடு, எரி வெயிலும் உண்டு - எரிக்கின்ற
வெயிலும் உண்டு.
இந்திர நீல வொளி இரவொளி போன்றது, முத்தொளி நில வொளி
போன்றது, செம்மணி ஒளி வெயிலொளி போன்றது. செம் மணியும்
ஆரமும் இந்திர நீலமும் இரவும் நிலவும் வெயிலும் என
வைக்கப்பட்டமையின் எதிர் நிரனிறையணி. உவமையணி, செ மணி :
தொகுத்தல் ;
ஏகாரம் :
ஈற்றசை. எறித்தல் - வீசுதல்.
(7)
419. |
உரகன்
உச்சியின் மணிப தித்த
உயர்ந்த பத்தி இடத்துமா
மரக தத்திரள் மணிகு யிற்றி
வகுத்த பத்தி அடங்கலும்
கரத லத்தினில் விரிதி ரைக்கடல்
கவரும் மத்த கசங்களும்
குரக தத்திர ளும்செ றிந்தன
கோடி கோடி இரட்டியே. |
(இ - ள்.)
உரகன் உச்சியின் மணி பதித்த உயர்ந்த பத்தி இடத்து
- ஆதிசேடனுடைய உச்சியில் இருக்கிற மணிகளைப் பதித்த உயர்ந்த
பத்திகளிலும், மா மரகதத் திரள் மணி குயிற்றி - உயர்ந்த மரகத
மணிகளைப் பதித்து, வகுத்த பத்தி அடங்கலும் - பிரிக்கப்பட்ட பத்திகள்
முழுவதிலும், கர தலத்தினில் விரி திரைக் கடல் கவரும் மத்த கசங்களும்
- கைகளினால் விரிந்த அலைகளையுடைய கடலை வாரிக் கொள்ளும்
மதயானைகளும், குரகதத் திரளும் - குதிரைக்கூட்டங்களும், ஆகிய
இரண்டும், கோடி கோடி இரட்டியே செறிந்தன - கோடி கோடி
யிரட்டியவை நிறைந்திருந்தன.
யானைகள் ஒருகோடி, குதிரைகள் ஒரு கோடியுமாக இரட்டித்தன.
யானைகள் இரண்டு கோடி குதிரைகளிரண்டு கோடி எனக் கொள்ளினும்
பொருந்தும்.
(8)
|
அரம்பையர்
தொழில் |
420. |
ஆடலும்
புனல் ஆடலும் பொழில்
ஆடலும் வெறி ஆடலும்
பாடலும் துணர் சூட லும்பல
பாவை பைங்கிளி பூவையாழ்
தேடலும் பொழல் சேர்த லும்கலை
தேர்தலும் குறை தீர்தலும்
கூடலும் தமில் ஊடலும் தொழில்
கோதை யர்க்குள நாளெலாம். |
|