|
ஐந்தருக்களின்
கொடை |
422. |
நனி
சிவப்புறு தளிர்வி ளைப்பன
நனைவி ளைப்பன நனைதொறும்
இனிய உத்தம நறைவி ளைப்பன
இலைஉ குப்பன இளமதுப்
பனிஉ குப்பன மணிஉ குப்பன
பணிஉ குப்பன படுசெழும்
கனிஉ குப்பன மலர்உ குப்பன
கற்ப கப்பொழில் ஐந்துமே. |
(இ
- ள்.) கற்பகப் பொழில் ஐந்தும் - கற்பகச் சோலையிலுள்ள
ஐந்து தருக்களிலும், நனி சிவப்புறு தளிர் விளைப்பன - மிகவும் சிவந்த
தளிர்களை வளைக்கின்றனவும். நனை விளைப்பன - அரும்புகள்
விடுகின்றவையும், நனை தொறும் இனிய உத்தம நளை விளைப்பன -
அவ்வரும்பு களிலெல்லாம் இனிமையான உத்தமமான தேனைப்
பெருக்குகின்றவைகளும், இலை உகுப்பன - இலைகளை
உதிர்க்கின்றவைகளும், இள மதுப்பனி உகுப்பன - புதிய தேன்
துளிகளைச் சிந்துவனவும், மணி உகுப்பன - மாணிக்கமணிகளை
உதிர்க்கின்றவைகளும், பணி உகுப்பன - ஆபரணங்களை
உதிர்க்கின்றவைகளும், படு செழுங்கனி உகுப்பன - பொருந்திய
செழிப்பான பழங்களை உதிர்க்கின்றவைகளும், மலர் உகுப்பன -
பூக்களைச் சிந்துகின்றவையும் (ஆகி விளங்கின.)
நனி : உரிச்சொல் ; விளைப்பன, உகுப்பன : அஃறிணைப்
பலவின்பாற்பெயர்; பணி : காரணப்பெயர். ஐந்தும் : உம்மை முற்றும்மை;
ஐந்தருக்கள் - அரிச்சந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம்
என்பன. இவை நிறைந்த சோலையைக் ''கற்பகப்பொழில்'' என்றார்;
தலைமைபற்றி வந்த பெயர்.
(11)
|
அம்மனை,
பந்து, கழங்காடல் |
423. |
வார்இ
றுக்கி விசித்து மாமணி
மாடம் ஏறிம லர்க்குழல்
கார்இ றுக்கி மடந்தை மாதர்
கழங்கு கந்துகம் அம்மனை
கூர்உ கிர்க்கை சிவப்ப ஆடுவ
கொத்து மாமுடி உற்றபொன்
மேரு வில்பல கால்வி ழுந்தெழும்
மீன்இ னத்தை நிகர்க்குமே. |
(இ - ள்.)
வார் இறுக்கி விசித்து - கச்சினை இறுகக்கட்டிக்
கொண்டு, மா மணி மாடம் ஏறி - சிறந்த அழகிய உப்பரிகைகளில்
ஏறியிருந்துகொண்டு. மலர்க் கார் குழல் - பூச்சூடிய மேகம் போன்ற
கருநிற கூந்தலை, இறுக்கி - இறுகக் கட்டிக்கொண்டு, மடந்தை மாதர் -
மடந்தைப் பருவப்பெண்கள், கழங்கு கந்துகம் அம்மனை - கழற்சிகளும்
பந்துகளும் அம்மானைகளும்
|