ஆகிய விளையாடல்களை,
கூர் உகிர்க் கை சிவப்ப ஆடுவ -
கூர்மையான நகங்களையுடைய கைகள் சிவக்கும்படி ஆடுவது, கொத்து
மாமுடி உற்ற பொன் மேருவில் பலகால் விழுந்து எழும் மீன் இனத்தை
நிகர்க்கும் - கூட்டமாகிய பெரிய சிகரங்களைப் பொருந்திய பொன்
மயமாகிய மாமேரு மலையின் பலமுறை விழுந்து எழுகின்ற
நட்சத்திரங்களை ஒத்திருக்கும்.
உவமையணி;
மாமுடி : உரிச்சொற்றொடர் ; குழல் கார் : குழலாகிய
கார் ; உருவகம். அடிமலர் என்பது போலி. மேன் மாடம் இமயமலையைப்
போன்றிருந்தது எனவும், அம் மாடத்தின்மே லெழுந்துவந்து விழும்
கழங்கும், அம்மனை, பந்துகள் விண்மீன்கள் விழுந்துபின் எழுவன போலத் தோன்றின என்பது.
(12)
|
அரம்பையர்
ஆடல் பட லொலி |
424. |
துடிநு
டங்கிடை மாதர் கைபுனை
தொடிமு ழங்கிட மாடமேல்
அடிநு டங்கிட நடுநு டங்கிட
நுனிநு டங்கிட அம்பொனின்
கொடிநு டங்குவ கடையு கத்தெழு
குரைக டற்றொனி அன்றிஅவ்
விடிநு டங்குவ தென்னின் மற்றினி
யாவ தேநிக ராவதே. |
(இ - ள்.)
துடி நுடங்கு இடை மாதர் - உடுக்குப்போன்ற
துவள்கின்ற இடைகளையுடைய பெண்கள், கை புனை தொடி முழங்கிடும்
மாடமேல் - கைகளில் அணிந்திருக்கிற வளையல்கள் ஒலிக்கும்படி
உப்பரிகைகளின்மேல், அடி நுடங்கிட - காற்சிலம்பு ஒலிக்கவும், நடு
நுடங்கிட - அரையிலணிந்துள்ள மேகலை ஒலிக்கவும், நுனி நுடங்கிட -
மார்பு அணிகள் ஒலிக்கவும், அம் பொனின் கொடி நுடங்குவ - அழகிய
பொன்மயமான கொடி போன்ற பெண்கள் நடனமாடுவது, கடை உகத்து
எழு குரை கடல் தொனி - ஊழிக்கால முடிவில் எழுகின்ற
ஆரவாரிக்கின்ற கடல் முழக்கம், அ இடி நுடங்குவ என்னின் அன்றி -
அந்த யுகமுடிவில் இடி முழக்கமும் போன்றிருந்தது என்று
கூறுவதல்லாமல், இனி யாவதே நிகராவது - வேறு எதுதான் அதற்கு
ஒப்பாவது என்று சொல்வது.
துடி இடை : உவமத்தொகை. நுடங்குஇடை : வினைத்தொகை
; அடி
நடு நுனி : இட ஆகுபெயர்கள் ; பொனின் : தொகுத்தல் : பொனின்
கொடி : அன்மொழித்தொகை ; கடையுகம் : இலக்கணப் போலி ; யா :
வினாப்பெயர் இன்மை குறித்துநின்றது ; மற்று : அசை.
ஏகாரம் :
ஈற்றசை. அன்றி : வினையெச்சம். இடியும் : உயர்வு
சிறப்பும்மைதொக்கது. யுகமுடிவில் எழுங்கடல் ஒலியும் இடி யொலியும்
மிகப் பெருகிய ஒலியாதலின் இவற்றையன்றிக் கூறுவதற்குவேறு
உவமையில்லை என்ற கருத்தினால் 'யாவதே நிகராவதே' என்றார்.
(13)
|