|
ஊடல்
கூடலினீங்கிய மணிமுத்தி னொளி |
425. |
தலவி
யப்புறும் அரமி யச்சிறு
சாளரப் புழை யால்விழும்
புலவி யில்பரி பந்தி யின்இரு
புடைவி ழுந்து நுடங்கிய
கலவி யில்பரி தரள மாமணி
கங்கு னங்கைகை பற்றியே
நிலவெ னக்கென அரிஎ னக்கெனும்
நீதி ஒப்பன வீதியே. |
(இ
- ள்.) தலம் வியப்புறும் அரமியச் சிறு சாளரப் புழையால்
விழும் - பல இடங்களில் அதிசயிக்கத்தக்க அழகுவாய்ந்த
சிறுசன்னல்களின் வழியாக விழுகின்ற, புலவியில் பரி பந்தியின் இரு புடை
விழுந்து - ஊடற்காலத்தில் நீங்கிய தரளமும் மாமணிகளும் வரிசையாக
இரண்டுபக்கங்களிலும் விழுந்து, நுடங்கிய கலவியில் - பின்னர் அசைந்து
வளைந்து கூடும் கலவிபுரியும்போது, பரி தரள மா மணி - கழன்று
விழுந்துள்ள முத்துகளும் மாணிக்கங்களும் தெருவில் கிடக்கும் காட்சி,
கங்குல் நங்கை கை பற்றியே - இரவாகிய பெண்ணின் கையைப்
பிடித்துக்கொண்டு, நிலவு எனக்கென - சந்திரன் வெண்ணில வொளி
பரப்பி இரவு என் நாயகி என, அரி எனக்கு எனும் - சூரியன் செந்நிற
ஒளி பரப்பி இரவானவள் எனக்குரியவள் என்று கூறும், நீதி ஒப்பன
வீதி - முறைமைபோன்றிருந்தன வானுலகத் தெருக்கள்.
இந்திரன்
நகரில் இரவில் ஊடலும் கூடலும் தலைவர்
தலைவியர்க்குள் நிகழ்கின்றன. அப்பொழுது முத்துகளும் மாணிக்கங்களும்
தெருக்களில் சிதறப்படுகின்றன. முத்தின் ஒளி நிலவொளி போன்றிருக்கிறது.
மாணிக்க ஒளி சூரியன் ஒளி போன்றிருக்கிறது. தரள மாமணி : தீவக அணி.
''உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு''
என்ற குறளில் ஊன்
என்பது போலத் தீவகமாக நிற்கிறது. தெருக்களிற்
சில இடங்களில் செம்மணி இருளை விழுங்கியது. சில இடங்களிற்
முத்துகள் இருளை விழுங்கின. இக்கருத்துத்தோன்ற
''நிலவெனக்கென......வீதியே'' என்றார். ''புலவியிற்பரி, கலவியிற்பரி
தரளமாமணி'' எனக் கூட்டுக.
(14)
|
உள்ளத்தைக்
கவரும் ஆடல் பாடல் |
426. |
நீடு
மாசையின் ஈவ தெண்ணுறு
நெஞ்சினார் பலர் ஆயினும்
கூடு மாசையி னோடும் உற்றது
கொள்ளு வார்அவ ணின்மையால்
பாடும் மாதர் யாழி னோடு
பயிற்று மாதர் அரங்கினின்
றாடுமாதர் தினம்பெ றுங்கொடை
அண்ட வாணர்கள் நெஞ்சமே. |
(இ - ள்.)
நீடும் ஆசையின் ஈவது எண்ணுறும் நெஞ்சினார் பலர்
ஆயினும் - மிகுந்த விருப்பத்தோடு கொடுப்பதற்கே கருதுகின்ற
மனமுடையவர் பலரிருப்பினும், கூடும் ஆசையினோடும் உற்றது
கொள்ளுவார் - மிகுந்த விருப்பத்தோடு கொடுத்ததை ஏற்றுக்கொள்பவர்,
அவண் இன்மையின் - அவ்விண்ணுலகில் இல்லாததினால், பாடும் மாதர்
யாழினோடு பயிற்றும் மாதர் - பாடுகின்ற பெண்களும் வீணை
பயில்விக்கும் பெண்களும், அரங்கின் நின்று ஆடும் மாதர் - சபையில்
நின்று ஆடுகின்ற பெண்களும், தினம் பெறுங் கொடை - நாள்தோறும்
பெறும் கொடைப்பொருள், அண்ட வாணர்கள் நெஞ்சமே -
விண்ணுலகத்து ஆடவர் உளமே (பொருளல்ல.)
ஈவதே என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால்
தொக்கது. நடன
மாதர் ஆடவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்வார்களே யன்றி அவர்
கொடுக்கும் பொருளை வாங்கமாட்டார்கள்.
''ஈவாரும் கொள்வாரும் இல்லத வானத்து
வாழ்வாரே வன்க ணவர்''
என்ற அடிகளை ஒப்பிடுக.
(15)
|
பொன்னுலக
மங்கையர் மின்னு மேகமும்
என்னத் தோன்றல் |
427. |
பாதி
மாமதி ஒத்த வானுதல்
உற்ற பட்டம்இ லங்கிடச்
சோதி வார்குழை வீச வேய்புரை
தோண்ம ணித்தொடை மின்னவே
கோதி வாரி முடித்த பாரிய
கொண்டை நின்றுகு லுங்கிட
வீதி வாய்வரும் மாத ரேநிலம்
மின்னும் மேகமும் என்பவே. |
(இ
- ள்.) பாதி மா மதி ஒக்க வாள் நுதல் - பாதிச்சந்திரனுக்கு
ஒப்பான ஒளிபொருந்திய நெற்றியில், உற்ற பட்டம் இலங்கிட -
பொருந்தியுள்ள பட்டம் விளங்கவும், சோதி வார் குழை வீச - ஒளி மிக்க
நீண்ட காதணிகள் அசையவும், வேய் புரை தோள் மணித்தொடை மின்ன
- மூங்கில்போன்ற தோள்களில் அழகிய மணிமாலைகள் ஒளிவீசவும்,
கோதி வாரி முடித்த பாரிய கொண்டை நின்றுகுலுங்கிட - சிக்கெடுத்து
வாரி முடிக்கப்பெற்ற பெரிய கொண்டை அவிழாது நிலை கொண்டு
குலுங்கவும், வீதி வாய் வரும் மாதரே - தெருக்களில் வருகிற
பெண்களையே, நிலம் - பூமியிலுள்ளவர்கள், மின்னும் மேகமும் என்ப -
மின்னலும் மேகமும் என்பார்கள்.
|