பக்கம் எண் :


218

     அரம்பையரின் நெற்றி பாதி மதியும் பட்டம் நிலவொளியும் குழை
விண்மீனும் தோளிலுள்ள மணி மாலை மின்னலும் கொண்டை மேகமும்
போன்றன. ஆதலின் தேவலோகப் பெண்களை வான ஒளிப்
பொருள்களும் மேகமும் என உலகத்தவர் கூறுவர். பாதி மதி:
குறிப்புப்பெயரெச்சத்தொடர், மாதரே: ஏகாரம் தேற்றம். வீதி வாய்:
ஏழாம்வேற்றுமை.
                                                    (16)

      பொன்னுலகச் சிறப்பு
428. நன்ன கர்ப்பெரு வண்மை யும்திரு
   வும்சிறப்பு நலின் றிடில்
பொன்ன கர்க்குவ மிப்பர் பற்பல
   நூனெறிப் புல வோரெலாம்
அந்ந கர்க்குவ மிக்க ஒப்பதி
   லண்ட ரண்டம னைத்திலும்
எந்ந கர்ப்பொலி வந்ந காக்கு
   நிகர்க்கும் என்ன இயம்புவேன்.

     (இ - ள்.) நல் நகர்ப் பெரு வன்மையும் திருவும் சிறப்பும்
நவின்றிடில் - நல்ல ஒரு நகரத்தினுடைய பேரழகினையும் பெருஞ்
செல்வத்தினையும் பெருஞ்சிறப்பினையும் கூறின், பற்பல நூல் நெறிப்
புலவோர் எலாம் - பலபல நூனெறிப் புலவர்கள் எல்லாம், பொன்
நகர்க்கு உவமிப்பர் - பொன்னகரத்திற்கு ஒப்பாகச் சொல்வார்கள்,
அந்நகர்க்கு உவமிக்க அண்டர் அண்டம் அனைத்திலும் ஒப்பது இல் -
அத்தகைய பொன் நகர்க்கு ஒப்பாகச் சொல்வதற்கு அண்டபகிரண்டம்
முழுவதினும் அதுபோன்றது இல்லை எந்நகர்ப் பொலிவு அந்நகர்க்கு
நிகர்க்கும் என்ன இயம்புவேன் - எந்த நகரத்தின்அழகு அந்த
நகரத்திற்கு ஒப்பாகும் என்று நான் சொல்லுவேன்.

     உம்மை: எண்ணும்மை; இயம்ப இயலாது என்பதாம். ஒரு நகரத்தைச்
சிறப்பித்துக் கூறும்போது பொன்னகரத்தை உவமையாக்குவார் புலவர்கள்.
அப் பொன்னகரத்தையே சிறப்பிக்க எந்நகரத்தை உவமையாக்க வியலும்?
ஒரு நகரமும் அதற்கு உவமையாகாது என்க.
                                                    (17)

 
        கவிக் கூற்று
429. ஆன சித்திர மாந கர்க்குள்
   அலாந் துயர்ந்தெழு கற்பகக்
கான கத்திடை வேலை பக்தொர்
   காசு நீள்வரை யாமெனத்
தான வர்க்குட னான வெற்பரி
   தாழ்சு டர்க்குலி சக்கர
வான வர்க்கிறை யோனமாந் துறை
   மண்டபத் தைவி ளம்புவாம்.