பக்கம் எண் :


219

     (இ - ள்.) ஆன சித்திர மாநகர்க்குள் - அத்தகைய அழகிய அப்
பொன்னகரில், அலர்ந்து உயர்ந்து எழு கற்பகக் கானகத்திடை - மலர்
பூத்து ஓங்கி வளர்ந்துள்ள கற்பகக் காட்டில், தானவர்க்கு உடனான வெற்பு
அரி - அசுரர்களுக்கு உதவியான மலைகளின் சிறகை அறுத்த, தாழ்
சுடர்க்குலி சக்கர வானவர்க்கு இறையோன் - ஒளிவீசுகின்ற வச்சிரப்படை
ஏந்திய தேவர்களுக்கரசனான இந்திரன், வேலை புக்க தோர் காசு நீள்
வரையாம் என - கடலில் புகுந்து ஒளித்த மணிகள் மிகுதியாகவுள்ள
மைந்நாக மலை என்று சொல்லும்படி, அமர்ந்து உறை மண்டபத்தை
விளம்புவாம் - பொருந்தியிருக்கின்ற தேவசபா மண்டபத்தைப்பற்றிக்
கூறுவாம்.

     மா நகர்: உரிச்சொற்றொடர்; கற்பகச்சோலை கடல்போலப்
பசுமையாக இருந்தது. இந்திரன் அரசிருக்கை மண்டபம் கடலின்
நடுவேயிருக்கும் மைந்நாக மலைபோன்று தோன்றியது என்பது.
                                                    (18)

 
  அரசிருக்கை மண்டபச் சிறப்பு
430. அத்தி வாரம் இருத்தி வெண்படி
   கத்த மைத்தத ளத்ததாய்ச்
சித்தி ரக்கன கத்த கட்டளை
   செய்து யர்த்த குறட்டினிற்
பத்தி யாயிர வாயி ரத்த
   பருத்த தூண்க ணிறுத்திமேல்
வைத்த போதிகை உத்தி ரம்பல
   வச்சி ரத்தின் வகுத்ததே.

     (இ - ள்.) அத்தி வாரம் இருத்தி - அடிவாரம் உறுதியாக
அமைத்து, வெண் படிகத்து அமைத்த - வெண்மையான பளிங்கினாற்
செய்த, தளத்ததாய் - தளத்தையுடையதாய், சித்திரக் கனகத் தகட்டு அளை
செய்து - அழகாகப் பொற்றகடுகளால் சந்து பொதிந்து, உயர்த்த
குறட்டினில் - உயரமாகக் கட்டியிருக்கிற திண்ணைக் குறடுகளில், பத்தி
ஆயிர ஆயிரத்த பருத்த தூண்கள் நிறுத்தி - வரிசைக்கு ஆயிரம்
ஆயிரமாகப் பருமனான தூண்களை நிறுத்தி, மேல் வைத்த போதிகை -
அவற்றின்மேல் வைத்திருக்கிற போதிகைகளும், உத்திரம் பல வச்சிரத்தின்
அமைத்ததே - உத்திரங்களும் பல வயிரத்தினால் செய்யப்பெற்றனவே.

     உத்திரம் பல: ஒருமைப்பன்மை மயக்கம்;

     ஏகாரம் : ஈற்றசை. இவ்வாறு கொலுமண்டபம் அமைந்திருந்தது.
                                                    (19)

 
431. இட்ட பத்தியின் இந்த்ர நீல
   மிசைத் தடுத்தசு வர்க்குமேல்
மட்ட றச்சுடர் மரக தத்தில்
   வகுத்தெ டுத்த நிலத்தது
விட்ட வாயிலின் நட்ட தூண்மணி
   மேத கத்த தராமணி
முட்ட வைத்த முகட்ட தொண்கதிர்
   முத்த ணிந்தமு கப்பதே.