(இ
- ள்.) இட்டபத்தியின் - அவ்வாறு போடப்பட்ட வரிசையில்,
இந்த்ர நீலம் மிசைத் தடுத்த சுவர்க்குமேல் - இந்திரநீலக் கற்கள் மேலே
பதிக்கப்பெற்றுத் தடுத்த சுவருக்கு மேலே, மட்டு அறச் சுடர் மரகதத்தில்
- அளவற்ற ஒளிவீசுகின்ற பச்சைக் கற்களால், வகுத்து எடுத்த நிலத்தது -
செய்து உயர்த்தின தளத்தினை உடையது, விட்டவாயிலின் நட்ட தூண் -
உள்ளே புகும்படி விட்ட வாசலில் நட்டுள்ள தூண்களானவை, மணி
மேதகத்தது - அழகிய கோமேதகத்தினாலாயது, அரா மணி முட்டவைத்த
முகட்டது - நாகமணிகள் உச்சியிற் பதிக்கப்பெற்ற முகட்டினையுடையது,
ஒண் கதிர் முத்தணிந்த முகப் பது - பேரொளி வீசுகின்ற முத்துகளால்
அணிசெய்யப்பெற்ற முகப் பினையுடையது.
நிலத்தது மேதகத்தது, முகட்டது, முகப்பது: ஒன்றன் பால் குறிப்பு
வினைமுற்றுகள்.
ஏகாரம் :
ஈற்றசை. அரசிருக்கை மண்டபத்தின் சிறப்புக் கூறுவது
இது. இந்திரநீலக் கற்சுவர், மரகதத்தால் அடித்தளம், தூண்கள்
கோமேதகம், நாகமணி முகப்பிற் பதிப்பிக்கப்பட்டது அம் மண்டபம்
என்க.
(20)
432. |
ஆளி
சிங்கம் இபம் பரித்திரள்
அன்னம் அஞ்சுகம் எண்ணிலா
வோளி தோறு நிறுத்தி நீள்வயி
டூரி யத்தின் நிரைத்ததால்
கோளி ருந்தன வோம டங்கல்
கொழுந்து விட்டன வோகுழூஉம்
வாளி ருந்தன வோமு கட்டினில்
வைத்த பூரண கும்பமே. |
(இ - ள்.)
ஆளி சிங்கம் இபம் பரித் திரள் அன்னம் அஞ்சுகம் -
யாளி சிங்கம் யானை குதிரை இவற்றின் கூட்டங்களையும் அன்னப்
பறவைகள் அழகிய கிளிகள் இவைகளையும், எண்ணிலா ஒளி தோறும்
நிறுத்தி - கணக்கற்ற வரிசைகள் தோறும் நிற்கச்செய்து, நீள்
வயிடூரியத்தின் நிரைத்தது - நீண்ட வயிடூரியத்தால் நிரலாக
வைக்கப்பட்டது, முகட்டினில் வைத்த பூரண கும்பம் - மேல்முகட்டில்
வைக்கப்பட்ட நிறைகுடம், கோள் இருந்தனவோ - நட்சத்திரங்கள்
கூடியிருந்தனவோ, மடங்கல் கொழுந்துவிட்டனவோ -
வடவாமுகாக்கினியே கொழுந்துவிட்டெரிகின்றனவோ, குழூஉம் வாள்
இருந்தனவோ - கூடிய ஒளிகள் எல்லாம் திரண்டு இருந்தனவோ என
விளங்கினது.
ஐய அணி, இலா: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,
குழூஉம்:
இன்னிசை யளபெடை;
ஏகாரம் :
ஈற்றசை: நிரைத்தது+ஆல்: அசை. மண்டபம் நீரைத்தது
எனக் கூட்டுக. பூரண கும்பம் இருந்தவோ, விட்டனவோ இருந்தனவோ
என்ன விளங்கிற்று எனச் சொல் வருவித்து முடிக்க.
(21)
|