பக்கம் எண் :


221

433. காத மாயிர நான்ம ருங்கு
   கணித் தகன்று நிலந்தொறும்
பூத மாயிர கோடி கோடி
   புறத்தி னின்று சுமந்திட
மீத டர்ந்து நிவந்து மேனிலம்
   விண்டெ ழுந்து வளர்ந்துபோய்
ஆதி நான்முக னார்ப தத்தினும்
   அப்பு றத்தும் உயர்ந்ததே.

     (இ - ள்.) (அரசிருக்கை மண்டபம்) ஆயிரகாதம் நான்
மருங்குகணித்து அகன்று - ஆயிரம் காதவரை நான்கு பக்கங்களிலும்
கணிக்கப்பட்ட அகலமுடைத்தாய், ஆயிரகோடி கோடி பூதம் புறத்தினின்று
சுமந்திட - ஆயிரங் கோடானுகோடி பூதங்கள் வெளியே நின்றுதாங்க,
மீது அடர்ந்து நிவந்து - மேலே நெருங்கி உயர்ந்து. மேல் நிலம் விண்டு
எழுந்து வளர்ந்துபோய் - மேலுலகு பிளந்து உயர்ந்தது எழுந்துபோய்,
ஆதி நான் முகனார் பதத்தினும் அப்புறத்து உயர்ந்தது - ஆதியாயுள்ள
பிரமனுலகத்திற்கும் அப்பால் உயர்ந்திருந்தது.

     உயர்ந்தது + ஏ = அசை.

     அரசிருக்கை மண்டபம் நாற்புறமும் ஆயிரங்காதவரை யகன்று
பூதங்கள் கோடிக்கணக்கானவை தாங்குவதுபோல உருவம் செய்து
நிறுத்தப்பட்டு மேலுயர்ந்து பிரமனுலகத்தையும் கடந்து நின்றது என்பது.
                                                    (22)

  இந்திரன் கொலுவீற்றிருத்தல்
434. அயன றிந்துவி தித்த வண்ட
   மனைத்துமிந் நிக ரன்றென
மயன றிந்து படைத்த சித்திர
   மண்ட பத்தினி லங்கவன்
வியன றிந்து கொடுத்த வாதன
  மீதுமா தொடும் வேதநூல்
பயன றிந்துணர் குரவர் தம்மொடு
   பாகசா தனன் மேவினான்.

     (இ - ள்.) அயன் அறிந்து விதித்த அண்டம் அனைத்தும் இந்நிகர்
அன்று என - பிரான் தெரிந்து படைத்த எல்லா உலகங்களும் இதற்கு
ஒப்பல்ல என்று சொல்லும்படி, மயன் அறிந்து படைத்த சித்திர
மண்டபத்தினில் - தேவசச்சனாகிய மயனானவன் தெரிந்து படைத்த
அழகிய இம்மண்டபத்தில், அங்கு அவன் வியன் அறிந்து கொடுத்த
ஆதனம் மீது - அங்கு மயனானவன் இந்திரனுடைய பெருமை தெரிந்து
கொடுத்த