சிம்மாசனத்தின்மேல்,
மாதொடும் - இந்திராணியுடனே, வேத நூற்பயன்
அறிந்து உணர் குரவர் தம்மொடு - வேதநூற்பயனைத் தெரிந்துணர்ந்த
ஆசிரியர்களுடன், பாகசாதனன் மேவினான் - தேவேந்திரன்
கொலுவீற்றிருந்தான்.
பாகசாதனன்: காரணப்பெயர். பாகன் எனபவன் விருத்திராசுரனின்
தம்பி ; விருத்திராசுரனை இந்திரன் கொன்றதைக்கேட்ட பாகன்
இந்திரனோடு எதிர்த்துப் போர்புரிந்து இந்திரனாற் கொல்லப் பட்டான்.
பாகனைக் கொன்ற காரணத்தால் இந்திரன் பாகசாதனன் எனப்பட்டான்.
மயன்
என்பவன் தெய்வத்தச்சன்; அவன் இவ்வாறு இக் கட்டடம்
அமையவேண்டும் என்று நினைத்தால் அவ்வாறே யமைந்து நிற்கும்.
இவ்வியல்பு வாய்ந்தவன் அத் தச்சன். அவனாற் சமைக்கப்பட்டது
அவ்வரசிருக்கை மண்டபம் என்க. அம் மண்டபத்தில் இந்திரன்
அமர்ந்திருந்தான்.
(23)
435. |
நரகி
னின்றிடும் இருளை யும்திரு
மணிமு டிச்சுடர் நக்கிட
விரகி னின்றொரு கோடி ஞாயிறு
மிக்கெ ழுந்தன வாம்எனப்
பெருகி நின்றொளிர் மகர தோரணம்
மிசைசி றந்து பிறங்கிட
வருகு நின்றணி கவரி கோடி
அரம்பை மாதர் இரட்டவே. |
(இ - ள்.)
நரகில் நின்றிடும் இருளையும் - கீழுலகத்தினிற்கும்
இருளினையும், திருமணி முடி சுடர் நக்கிட - சிறந்த மணிகள் பதித்த
கிரீடத்திலெழுஞ்சுடர் நீக்கிடவும், விரகில் நின்று ஒருகோடி ஞாயிறும்
மிக்கு எழுந்தன ஆம் என - சூழ்ச்சியாக நின்று ஒருகோடி சூரியரும்
உயர்ந்து எழுந்தனர் என்று சொல்லும்படி, பெருகி நின்று ஒளிர் மகர
தோரணம் மிசை சிறந்து பிறங்கிட - பெருக்கமாக நின்று விளங்கும் மகர
தோரணங்கள் மேலே சிறப்பாக விளங்கவும், அருகு நின்று அணி கவரி
கோடி அரம்பை மாதர் இரட்ட - அடுத்து நின்று அழகிய
வெண்சாமரையைப் பிடித்துக் கோடிக்கணக்கான மாதர்
வீசிக்கொண்டிருக்கவும்;
இது அடுத்த கவியோடு தொடரும். குளகம் இது. நக்கிட,
என,
பிறங்கிட, இரட்ட, மன்னன் இருந்தனன் (25) என முடிக்க. மகர
தோரணங்கள் பல ஒளி வீசுவன ஞாயிறு பல ஓரிடத்தில் தோன்றின
என்று சொல்லும்படி தெரிந்தன என்க.
(24)
436. |
வெண்ணி
ழற்றிகழ் முத்த நீள்குடை
மேனி ழற்றுவ தாயிரம்
கண்ணி ழற்ப டவேஇ ருண்டு
கறுத்து மீளவே ளுப்பதாய்த்
தண்ணி ழற்செய இந்தி ராணி
தடம்பெ ருங்குழ லாயகார்
ஒண்ணி ழற்றிரு மேனி தாவிட
உம்பர் மன்னன் இருந்தனன். |
|