நசை பூண் வசிட்டன்
- கர்ப்பூர மணம் வீசும் அருந்ததியிடம் காதல்
கொண்ட வசிட்ட முனிவனும், வீரத்துவாசம் - தனது வீரமணமே, திசை
வீசிய - எண் திக்கிலும் கமழ்ந்த. கோசிகன் - விசுவாமித்திரனும்,
அந்நேரத்து - அப்பொழுது, வாசவனை நண்ணி - இந்திரனை அடுத்து,
நிறைந்து அணைந்தார் - குழுமிச்சேர்ந்தார்.
அருந்ததி
வடதிசையில் நட்சத்திர வடிவாயிருத்தலின் வடமீன்
எனப்பட்டாள் ; விசுவாமித்திரருடைய தவவீர மணம் எண்திசையும்
பரவியது இந்திரனிடத்திற்கு மேற்கூறிய முனிவர்கள் யாவரும் வந்து
சேர்ந்தனர் என்க.
(29)
|
இந்திரன்
கூறுதல் |
441. |
அருமா
மணிஆ தனம்அன்னவர் யார்க்கு நல்கி
இருமா தவத்தீ ரெனயாரு மிருந்த பின்னர்
திருமா முடிசாய்த் தெழிற்செங்கை அமைத்து விண்ணோர்
பெருமான் கனிவாய் மலர்ந்தின்னன பேச லுற்றான். |
(இ - ள்.)
அன்னவர் யார்க்கும் - அம்முனிவர் யாவர்க்கும்,
அருமா மணி ஆதனம் நல்கி - அருமையான மணிகள் அழுத்தப்பெற்ற
ஆசனங்களைக் கொடுத்து, மாதவத்தீர் இரும் என - பெரிய
தவமுனிவர்களே அமருங்கள் என்றுகூறி, யாரும் இருந்த பின்னர் -
எல்லோரும் இருந்த பிறகு, விண்ணோர் பெருமான் - தேவர்கோனாகிய
இந்திரன், திருமா முடி சாய்த்து - அழகிய பெருமை பொருந்திய
கிரீடத்தோடு தலைவணங்கி, எழில் செங்கை அமைத்து அழகிய சிவந்த
கைகளைத் தாழ்த்தி, கனி வாய் மலர்ந்து - கொவ்வைக் கனிபோன்ற வாய்
திறந்து, இன்னன பேசல் உற்றான் - இத்தகைய சொற்களைப் பேசத்
தொடங்கினான்.
அருமணி : பண்புத்தொகை, மா மணி : உரிச்சொற்றொடர்.
மாதவம்
: உரிச்சொற்றொடர் ; யார்க்கும் : உம்மை முற்றும்மை : பின்னர் - அர் :
பகுதிப்பொருள் விகுதி : கனி வாய் : உவமத்தொகை. உற்றான் - உறு :
பகுதி ; ஆன்: ஆண்பால் வினைமுற்று விகுதி. பகுதி ஒற்று இரட்டித்து
இறந்தகாலங் காட்டிற்று. யாவர் என்பது யார் என்றாயது.
(30)
|
இந்திரன்
வினவுதல் |
442. |
பாய்மைக்க
லோலக் கடல்சூழ்புவிப் பார்த்தி வர்க்குள்
தீமைக்கும் வேகச் சிலுக்குக்கும் இடங்கொ டாது
வாய்மைக்கு நன்னூல் வளனுக்கு மனத்தி லுற்ற
தூய்மைக்கும் மிக்கார் தமைஆய்ந்துநீர் சொன்மி
னென்றான்.
|
(இ
- ள்.) பாய் மைக் கல் ஓலக் கடல் சூழ் புவி -
அலைமோதுகின்ற நீலநிறம் பொருந்திய கல்லென்று ஓலிக்கின்ற கடல்
சூழ்ந்த உலகத்திலுள்ள, பார்த்திவர்க்குள் - அரசர்களுக்குள், தீமைக்கும் -
தீச்செயல்களுக்கும், வேகச் சிலுக்குக்கும் - விரைந்து பற்றுகின்ற
குற்றங்களுக்கும், இடங் கொடாது - சிறிதும் இடங் கொடாமல்,
வாய்மைக்கும் நன்னூல் வளனுக்கும் -
|