பக்கம் எண் :


226

உண்மைக்கும் நல்ல நூற்கல்வி நிறைவுக்கும், மனத்தில் உற்ற
தூய்மைக்கும் - மனத்திலே பொருந்தியிருக்கின்ற பரிசுத்தத்துக்கும்,
மிக்கார் தமை ஆய்ந்து சிறந்தவர்களை ஆராய்ந்து, நீர் சொன்மீன்
என்றான் - நீங்கள் சொல்லுங்கள் என்றான்.

     பாய் கடல்: வினைத்தொகை : மைக் கடல்: பண்புத்தொகை: கல்:
ஒலிக்குறிப்புச்சொல்; சொன்மின் : ஏவல் முன்னிலைப்பன்மை வினைமுற்று
இந்திரன் முனிவர்களை நோக்கி 'மண்ணுலக மன்னவர்க்குள் தீய செயலும்
குற்றமுமின்றி வாய்மை நெறி தவறாமல் மனத்தூய்மையுடன் அரசுபுரிபவர்
யார்? ஆய்ந்து கூறுக என்றான்.
                                                    (31)

 
        வசிட்டன் கூறுதல்   
443. நறையோ தியினாள் அயிராணி நலம்தி ளைக்கும்
இறையோ தியமாற் றம்யாவரும் கேட்ட பின்னர்ச்
சிறையோ திம்மேல் வருநான்முகன் செல்வன றெய்வ
மறையோ தியநீ திவசிட்டன் எடுத்து ரைப் பான்.

     (இ - ள்.) நறை ஓதியினாள் அயி ராணி - மணம் மிக்க
கூந்தலையுடைய இந்திராணியின், நலம் களைக்கும் அழகின்பத்தை
அனுபவிக்கும், இறை - அரசனாகிய இந்திரன், ஓதிய மாற்றம் - கூறிய
வினாவுரையை, யாவரும் கேட்ட பின்னர் - எல்லோரும் கேட்டபிறகு,
சிறை ஒதிமம் மேல்வரும் நான்முகன் செல்வன் இறகுகளையுடைய
அன்னவாகனத்தின்மேல் ஏறி வருகின்ற பிரமதேவன் மகனாகிய, தெய்வ
மறை ஓதிய நீதி வசிட்டன் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களில்
வல்ல நீதிமுறை தவறாத வசிட்ட முனிவன், எடுத்து உரைப்பான் - எடுத்து
மொழிவான்.

     யாவரும்: உம்மை முற்றும்மை. இந்திரன் கூறிய வினாவை
யாவருங்கேட்டு வாளாவிருந்தபோது வசிட்டன் கூறத் தொடங்கினான்
என்பது.
                                                    (32)

 
  அரிச்சந்திரனே சிறந்தவன் என வசிட்டன் கூறுதல்   
444.

பாருக் கொருவன் பரதார சகோத ரன்வெம்
போருக் கொருவன் புகழுக்கு மறைப்பொ ருட்கு
நேருக்கும் வீடா மனுநூனெறிக் குமபொ றைக்கும்
ஆருக்கும் மிக்கான் அரிச்சந்திரன் ஆகும் என்றான்.

     (இ - ள்.) பாருக்கு ஒருவன் - இவ்வுலகிலேயே ஒப்பற்றவன், பர
தார சகோதரன் - பிறர் மனைவியரைத் தன்னுடன் பிறந்த சகோதரிகளாகக்
கருதுகின்றவன், வெம்போருக்கு ஒருவன் - கடுமையான போர் புரிவதில்
நிகரற்ற வீரன், புகழுக்கும் மறைப்பொருட்கும் நேருக்கும்-புகழுக்கும்
வேதப்பொருளுக்கும் நேர்மைக்கும் வீடு ஆம் மனு நூல் நெறிக்கும் -
வீடுபேறு தரக்கூடிய மனுதரும நெறிக்கும், பொறைக்கும் - பொறுமைக்கும்,
ஆருக்கும் மிக்கான் - யாவர்க்கும் மேலானவன், அரிச்சந்திரன் ஆகும்
என்றான் - அரிச்சந்திரனேயாவன் என்று வசிட்டன் கூறினான்.