தாங்கிற்றிலன்,
நீங்கிற்றிலை: முற்றெச்சங்கள்: அன்று, ஏ: அசைகள்.
சீற்றம்: தொழிற்பெயர்: தாங்கு: பகுதி; கில்: ஆற்றலுணர்த்தும் இடைநிலை;
இல்: எதிர்மறை இடைநிலை: அன்: ஆண்பால் வினைமுற்று விகுதி.
வசிட்டன் சினந்தெழுந்ததுபோலவே கோசிகனும் சினந்து எழுந்தான்.
கோபத்தீக் கொழுந்து விட்டெரிந்து படர்ந்தது என்க.
(39)
|
இரு
முனிவர் கோபத்தீ எழுச்சி |
451. |
கானம்
திகழ்தா மரைக்கட்பிறந் துற்ற புத்தேள்
தானந் தனைநா டிஎழுந்தெரி தாக்க லோடும்
வானென் படும்வை யகம்என்படும் என்று வானோர்
கோனன் றுநடுங் கிஅலைந்து குலைந்தெ ழுந்தான். |
(இ - ள்.)
கானம் திகழ் தாமரைக் கண் பிறந்து உற்ற - வண்டுகள்
இசை முரல்கின்ற தாமரையில் தோன்றின், புத்தேள் தானம் தலை நாடி
எழுந்து - கடவுளாகிய அயனுடைய சத்தய உலகத்தைத் தேடி எழுந்து,
எரி தாக்கலோடும் - கோபத்தி வீசினபோது, வான் என் படும் - வானுலகு
என்ன பாடுபடும், வையகம் என் படும் - பூ உலகு என்ன பாடுபடும், என்று
- என்று, அன்று - அப்பொழுது, வானோர் கோன் நடுங்கி - தேவேந்திரன்
பயந்து, அலைந்து குலைந்து எழுந்தான் - அலைந்து நடுங்கி எழுந்தான்.
சினத்தீ யெழுந்து பிரமனுலகம்வரை சென்றது. அதன்
வெம்மை
ஆங்குள்ள பலரையும் சுட்டது. அது கண்ட இந்திரன் நடுங்கி யெழுந்தான்
என்க.
(40)
|
இந்திரன்
இருவரையும் கோபமாற்றுதல் |
452. |
ஆற்றா
நெடுவெஞ் சினம்ஆற்றி அமர்த்தி உள்ளம்
தேற்றா மகவான் றிருச்செம்மலர்க் கைஅ மைத்துக்
கூற்றால் விளைவா வனகண்டிடிற் கூறு நீர்மை
தோற்றால் இழிதக் கதுசெய்வதென் சொன்மி னென்றான்.
|
(இ
- ள்.) ஆற்றா நெடு வெஞ் சினம் ஆற்றி அமர்த்தி -
ஒருவராலும் தணிக்க முடியாத பெருங்கோபத்தைத் தணித்து அடக்கி,
உள்ளம் தேற்றா - அவர்கள் மனத்தைத் தேற்றி, திருச் செம் மலர்க்கை
அமைத்து - அழகிய செந்தாமரை மலர்போன்ற கையால் அமைந்திருக்கச்
சைகை காட்டி, கூற்றால் - உங்கள் மொழிகளால், விளைவாவன கண்டிடில்
- அரிச்சந்திரனிடத்தில் உண்டாகிய நன்மை தீமைகளை ஆராய்ந்து
பார்த்தால், கூறும் நீர்மை தோற்றால் நும் மிருவரில் ஒருவர் சொல்லுகின்ற
தன்மை பொய்யாகித் தோற்று விட்டால், இழி தக்கது செய்வது என் -
தோற்றவர்களை இழிவு படுத்தச் செய்யவேண்டிய செயல் என்ன, சொல்மின்
என்றான் - சொல்லுங்கள் என்று கேட்டான்.
ஆற்றா,
ஆற்றி : முரண்தொடை; தேற்றா : செய்யா என்னும்
வாய்பாட்டு வினையெச்சம்; செம்மல்; பண்புத்தொகை; மலர்க் கை:
உவமைத்தொகை; விளைவாவன: அஃறிணை வினையாலணையும்பெயர்.
'நும்மில் ஒருவர் தோற்றால் தோற்றவர் செய்யும் இழி செயல் யாது?
சொல்லுக' என்று வினாவினன் இந்திரன் என்பது.
(41)
|
வசிட்டன்
கூறிய வஞ்சினம் |
453. |
அன்பாற்
கடல்ஆ யவசிட்டன் அழன்று மன்னன்
தன்பாற் றவறுண் டெனக்கௌசிகன் சாய்க்கின் அன்றே
வெண்பாற் றவம்லிட் டிழிகட்டலை ஓட்டில் ஏந்தித்
தென்பாற் றனிச்செல் குவன்யானிது திண்ணம் என்றான். |
(இ - ள்.)
அன்பால் கடல் ஆய வசிட்டன் அழன்று - அன்பினால்
கடல்போன்ற வசிட்டன் கொதித்து, மன்னன் தன்பால் தவறு உண்டு எனக்
கௌசிகன் சாய்க்கின் - அரிச்சந்திர அரசனிடம் குற்றம் உண்டு என்று
கௌசிகன் சான்றுடன் காட்டினால், அன்றே - அப்பொழுதே, என்பால்
தவம் விட்டு - என்னிடத்திலுள்ள தவத்தைக் கைவிட்டு, தலை ஒட்டில்
இழிகள் ஏந்தி - தலையோட்டில் தாழ்ந்த கள்ளை ஏந்திக் கொண்டு,
தென்பால் தனிச் செல்குவன் - தெற்குநோக்கித் தனியாகப் போவேன்,
யான் இது திண்ணம் என்றான் - நான் இது செய்வது உறுதி என்று
சொன்னான்.
கள் + தலை = கட்டலை. செல் : பகுதி : சாரியை; வ்
: எதிர்கால
இடைநிலை. அன் : தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. கள்ளைத் தலை
யோட்டில் ஏந்துவது தென்திசை செல்வது தவமுனிவர்க்கு மிகவும் இழிவு என்பது தோன்றிற்று.
வசிட்டன் சினந்து வஞ்சினம் கூறினன். 'அரிச்சந்திரனைப்
பொய்யன்
எனச் சான்றுடன் காட்டினால் நான் என் தவத்தை விடுத்து கள்ளைத்
தலையோட்டிலேந்தித் தென்றிசை செல்வேன்: இது உறுதி'என்பது.
(42)
|
நாரதன்
கோசிகனுக்கு நல்லுரை கூறுதல் |
454. |
மாறா
நெறிகொண் டவசிட்டன்அம் மன்னன் உள்ளம்
வேறா மெனின்இச் சபதத்தை விளம்பு வானோ
தேறா இனிநின் சபதத்தைஇத் தேவர் கோன்முன்
கூறாய் எனநா ரதன்கொசி னுக்கு ரைத்தான். |
(இ
- ள்.) நாரதன் - நாரதமுனிவன், கோசிகனுக்கு -
விசுவாமித்திரனை நோக்கி, மாறா நெறி கொண்ட வசிட்டன் - நிலைபெற்ற
ஒழுக்கநெறி கைக்கொண்ட வசிட்டன், அம்மன்னன் உள்ளம் வேறாம்
எனின் - அந்த அரிச்சந்திரன் மனம் தான் சொல்லுவதற்கு
மாறுபட்டிருக்கும் எனின், இச் சபதத்தை விளம்புவானோ - இந்தச்
சபதத்தைச் சொல்வனோ? சொல்லான், தேறா - நன்றாகத் தெளிந்து, இனி
நின் சபதத்தை இத் தேவர்கோன்முன் கூறாய் என - இனிமேல் உனது
சபதத்தை இந்திரன்முன் சொல்வாயாக என்று, உரைத்தான் - சொன்னான்.
|