'வசிட்டன்மேற்
கொண்ட பொறாமையாற் கூறிவிட்டோமே! இதனை
மெய்யாக்கிக் காட்டுவது அரிய செயலன்றோ? எவ்வாறு முடிப்பது' என்று
ஆய்ந்தான் கோசிகன் என்பது.
(2)
|
விசுவாமித்திரரைப்
பார்க்க எண்ணிறந்த
முனிவர்
வரல் |
461. |
விண்ணி
ழிந்து விரிமலர்ச் சோலையின்
கண்ணி ருந்த கவுசிகற் காண்டுமென்
றெண்ணி கந்த முனிவர்வந் தீண்டுபு
மண்ணில் வீழ்ந்து வணங்கி இருந்தனர். |
(இ - ள்.)
விண் இழிந்து வரி மலர்ச் சோலையின்கண் இருந்த -
விண்ணுலகு விட்டு இறங்கி அலர்ந்த மலர்கள் நிறைந்த சோலையில்
அமர்ந்திருந்த, கவுசிகன் காண்டு என்று - விசுவாமித்திரரைப் பார்ப்போம்
என்று, எண் இகந்த முனிவர் வந்து ஈண்டுபு - அளவற்ற முனிவர்கள்
வந்து கூடி, மண்ணில் வீழ்ந்து வணங்கி இருந்தனர் - பூமியில் விழுந்து
வணங்கி இருந்தார்கள்.
விரி மலர் : வினைத்தொகை ; காண்டும் : தன்மைப்பன்மை
வினைமுற்று விகுதி : ஈண்டுபு : செய்பு என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சம். சோலையிலமர்ந்தபோது பல முனிவர் வந்து கண்டு
வணங்கினர் என்பது.
(3)
|
விண்ணுலக
நிகழ்ச்சியை முனிவர் வினவல் |
462. |
இருந்த
பின்னர் இருளறு நன்குணத்
தருந்த வத்தர் அனைவரும் ஐயநீ
பொருந்து பொன்னகர் புக்கபி னுற்றது
திருந்த வேயருள் செய்கென்று செப்பினார். |
(இ
- ள்.) இருந்த பின்னர் - இருந்த பிறகு, இருள் அறு - மலம்
அகன்ற, நன்குணத்து அருந்தவத்தர் அனைவரும் - நற்குணம் நிரம்பிய
அருந்தவமுனிவர் எல்லோரும், ஐய - பெரியோய்!, நீ பொருந்து
பொன்னகர் புக்கபின் - நீ பொருத்தமான தேவருலகம் போய்ச்
சேர்ந்தபின், உற்றது - ஆண்டு நடந்ததைத், திருந்தவே அருள்
செய்கென்று - திருத்தமாகச் சொல்லி யருளுவாய் என்று, செப்பினார் -
வினாவினர்.
நன்மை + குணம் = நன்குணம் அனைவரும் : முற்றும்மை ; ஐய :
விளிவேற்றுமை : ஐயன் என்பது பெயர். உற்ற : ஒன்றன்பால்
வினையாலணையும் பெயர். செய்கென்று : செய்க என்று என்பது.
அகரங்குறைந்து நின்றது. இது தொகுத்தல் விகாரம்.
(4)
|
கோசிகன்
உண்மை கூறாது மறைத்தல் |
463. |
கொற்ற
வாசவன் கூறிய மாற்றமும்
மற்றோர் வாய்மை வசிட்டன் உரைத்ததும்
உற்ற வாறும் உணர்த்துதல் இன்றியே
கற்றோர் வஞ்சனைக் கட்டுரை கூறுவான். |
|