(இ
- ள்.) கொற்ற வாசவன் கூறிய மாற்றமும் - வெற்றிபொருந்திய
இந்திரன் கூறிய சொற்களையும், மற்று ஓர் வாய்மை வசிட்டன் உரைத்ததும்
- ஏனை ஒப்பற்ற உண்மையே உரைக்கும் வசிட்டனது மொழியும், உற்ற
ஆறும் உணர்த்துதல் இன்றியே - அதற்குமேல் அங்கு நடந்தவற்றையும்
கூறாமலே, ஓர் வஞ்சனை கற்று கட்டுறை கூறுவான் - வேறோரு
வஞ்சனையைக் கற்பனை செய்து புதிதாகக் கட்டிமொழிந்தான்.
முனிவர்
வினாவுக்கு நிகழ்ந்த செயல்களைக் கூறாமல் வஞ்சனையாக
விசுவாமித்திரன் மற்றொன்று கூறுவான். அது பின்வருங் கவியால்
அறியலாம்.
(5)
|
விசுவாமித்திரன்
'வேள்வி செய்ய வந்தேன்' என்றல் |
464. |
தெரியு
நீண்மறை தேவர் அவைக்கணே
பெரிய மாதவர் பேசிய வேள்வியில்
அரிய தொன்று முடிக்கும் அவாவினாற்
கரிய ஓலக் கடற்புவி எய்தினேன். |
(இ - ள்.)
நீள் மறை தெரியும் தேவர் அவைக்கண் - நீண்ட
வேதங்கள் உணர்ந்த தேவர்களின் சபையில், பெரிய மாதவர் பேசிய
வேள்வியில் - சிறந்த பெருந்தவமுனிவர் கூறிய வேள்வியில், அரியது
ஒன்று முடிக்கும் அவாவினால் - அருமையான ஒப்பற்ற வேள்வியை
முடிக்க வேண்டுமென்ற விருப்பத்தினால், கரிய ஓலக் கடல் புவி
எய்தினேன் - கருமையான ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகினை
அடைந்தேன்.
கடற்புவி : முன்றாம்வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை, கரிய : குறிப்புப்பெயரெச்சம், தேவர் அவைக்கணே தெரியும்
நீண்மறை பெரிய மாதவர் எனக் கூட்டிப் பொருள்கொள்வதே சிறந்தது.
தெரியும் நீண்மறை வேள்வி எனக் கூட்டி ஆராயும் நீண்ட (பெரிய)
வேதத்திற் கூறிய வேள்வி எனக் கூறலும் ஒன்று.
(6)
|
கோசிகன்
கூறலும் முனிவர் கூறலும் |
465. |
சொல்வ
தொன்றுண்டு கேட்கத் துணிந்திரேல்
நல்ல தென்று கௌசிகன் நாட்டினான்
அல்ல தாயினும் நின்சொல் மறுத்திடல்
வல்ல மோஎன்று மாதவர் கூறினார். |
(இ
- ள்.) சொல்வ தொன்று உண்டு - (அரிய வேள்வி
முடிப்பதற்கு நான் உங்களிடம்) சொல்லவேண்டிய தொன்றிருக்கிறது,
கேட்கத் துணிதிரேல் - நீங்கள் கேட்கத் துணிந்தால், நல்லது என்று
கௌசிகன் நாட்டினான் - நன்மையாகும் என்று விசுவாமித்திரன்
கூறினான், மாதவர் - பெருந்தவ
|