முனிவர்கள், அல்ல
தாயினும் - நீ கூறுவது நன்மையற்றதாயிருந்தாலும்,
நின் சொல் மறுத்திடல் வல்லமோ என்று கூறினார் - உன்னுடைய
சொல்லை மறுக்க முடியுமோ என்று கூறினார்கள்.
ஓகாரம்
: எதிர்மறைப்பொருளில் வந்தது. நல்லது என மேல்
வந்ததால் 'அல்லது என்பதற்கு நல்லது அல்லது எனப் பொருள்
கூறப்பட்டது. தீமைசெய்யும்படி நீ கூறினும் அதனையும் செய்வோம் என்ற
கருத்து, முனிவர் 'நின் சொல்லை மறுத்திடல் வல்லமோ' என்றதால்
விளங்கிற்று
(7)
|
அரிச்சந்திரன்பால்
வேள்விக்குப் பொருள் கேட்டு வர
முனிவரை விடுத்தல் |
466. |
அருள்
அயோத்தி அரிச்சந்தி ரனையுற்
றிருள றும்பெரு வேள்விக்கி யான்சொலும்
பொருட ரும்படி இன்று பொருத்திநீர்
வருக என்று மறைமுனி கூறினான். |
(இ - ள்.)
அருள் அயோத்தி அரிச்சந்திரனை உற்று -
கருணையுடைய அயோத்தி மன்னனாகிய அரிச்சந்திரனை அடைந்து,
இருள் அறும் பெரு வேள்விக்கு - அஞ்ஞானம் நீக்கும் பெரிய
யாகஞ்செய்வதற்காக, யான் சொலும் பொருள் தரும்படி - நான்
சொல்லுகின்ற பொருள் தரும்படி, இன்று பொருத்தி நீர் வருக என்று -
இப்பொழுதே அவனை இசையச்செய்து வாருங்கள் என்று, மறைமுனி
கூறினான் - வேதமறிந்த விசுவாமித்திரன் கூறினான்.
வேள்விக்கி யான் : குற்றியலிகரம், சொலும்
: தொகுத்தல் ; வருக :
வியங்கோள் வினைமுற்று, மறைமுனி - மறையையாய்ந்த (சேர்ந்த) முனி :
இரண்டாம்வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
யான் கூறுமளவு பொருள் தரும்படி அரிச்சந்திரனை
இசைவித்து
வாருங்கள் என்று முனிவரை நோக்கி விசுவாமித்திரன் கூறினான் என்பது.
(8)
|
முனிவர்கள்
கோசலநாடு செல்லுதல் |
467. |
கேட்ட
போதில் எழுந்து கிரிப்பெருங்
காட்டை நீங்கிக் கடிபொழில் நீங்கியே
கூட்ட மோடு குளிர்புனற் கோசல
நாட்டை நண்ணினர் நான்மறை ஆளரே. |
(இ
- ள்.) கேட்ட போதில் - விசுவாமித்திரன் சொற்களைக்
கேட்டவுடன், நான்மறை ஆளர் - நான்கு வேதங்களிலும் வல்ல
முனிவர்கள். எழுந்து கிரிப் பெருங் காட்டை நீங்கி - புறப்பட்டெழுந்து
மலைகளையும் பெரிய காடுகளையும் கடந்துபோய், கடி பொழில் நீங்கி -
மணம் நிறைந்த சோலைகளையும் கடந்து, குளிர் புனல் கோசல நாட்டை
நண்ணினர் - குளிர்ந்த நீர்வளமிக்க கோசலநாட்டை அடைந்தார்கள்.
|