கடிபொழில்:
உரிச்சொற்றொடர். நான்மறை: பண்புத்தொகை. நான்கு
ஆகிய மறை என விரியும். விசுவாமித்திரன் கூறியவுடன் முனிவர்கள்
யாவரும் எழுந்து புறப்பட்டுக் காடு வனங்கடந்து கோசல நாட்டினை
யடைந்தனர் என்பது.
(9)
|
அரிச்சந்திரன்
அவைக்களம் அடைதல் |
468. |
கன்னல்
ஓங்கு கழனியிற் பொன்னிறச்
செந்நெல் கால்பொரச் சேக்கையின் மேவிய
அன்னம் எங்கணும் ஓடும் அணிநகர்
மன்னர் மன்னவர் மண்டபத் தெய்தினார். |
(இ - ள்.)
கன்னல் ஓங்கு கழனியில் - கரும்புகள் ஓங்கி
வளர்ந்துள்ள வயல்களில். பொன்னிறச் செந்நெல் கால் பொர - பொன்
போன்ற நிறத்தையுடைய செந்நெற்பயிர்கள் காற்றில் அலைய, சேக்கையின்
மேவிய அன்னம் - தாமரை அமளியில் பொருந்திய அன்னப் பறவைகள்,
எங்கணும் ஓடும் - எல்லா இடங்களிலும் பறந்து ஓடுகின்ற, அணி நகர்
மன்னர் மன்னவன் மண்டபத்து எய்தினர் - அழகிய அயோத்தியை
ஆளும் பேரரசனாகிய அரிச்சந்திரனுடைய கொலுமண்டபத்தை
அடைந்தார்கள்.
முனிவர்கள் அரிச்சந்திரனிருக்கும் மண்டபத்தை யடைந்தனர்
என்பது. கன்னலும் செந்நெலும் காற்றாலே யசைய அவ்வொலி கேட்டு
வெருவி யன்னப்பறவைகள் தம் சேக்கை விடுத்து அங்கும் இங்கும்
பறந்தோடும் வளமுடையது அயோத்திநகர் எனக் கொள்க.
(10)
|
அரிச்சந்திரன்
முனிவர்களை வினாவுதல் |
469. |
எய்தி
னாரை இறைஞ்சி இருத்தியே
நொய்தின் மன்னவன் மாமுகம் நோக்குறீஇ
வைதி கத்திரு மாதவத் தீர்வந்த
செய்தி செப்பும்என் றான்உரை செய்குவார். |
(இ
- ள்.) எய்தினாரை - அங்கு அடைந்த முனிவர்களை,
இறைஞ்சி - வணங்கி, இருத்தி - ஆசனத்திருக்கச்செய்து. மன்னவன்
நொய்தில் மாமுகம் நோக்குறீஇ - அரிச்சந்திரன் மென்மையாக
முனிவர்களுடைய முகத்தைப் பார்த்து, வைதிகத் திரு மாதவத்தீர் - வேத
நெறியொழுகும் சிறந்த தவச்செல்வர்களே!, வந்த செய்தி செப்பும் என்றான்
- நீவிர் வந்த காரியம் சொல்லுங்கள் என்றான், உரை செய்குவார் -
அவர்களும் சொல்வார்கள்.
எய்தினார் : வினையாலணையும்பெயர் ; இருத்தி : பிறவினை: மா
முகம் : உரிச்சொற்றொடர் ; உறீஇ: சொல்லிசை அளபெடை; செய்குவார்
- செய: பகுதி: கு : சாரியை ; வ் : எதிர்கால இடைநிலை ; ஆர் ;
பலர்பால் வினைமுற்று விகுதி.
(11)
|