|
முனிவர்
தம் வரலாறு கூறுதல் |
472. |
சந்தி
ராதித்தர் தானவர் வானவர்
இந்தி ராதிகள் யாவர்க்கும் எய்திட
வந்தி ராஒரு வேள்வி வளர்ப்பதை
நொந்தி ராமுற்ற நுண்ணிதின் எண்ணினோம். |
(இ
- ள்.) சந்திர ஆதித்தர் - சந்திர சூரியர், தானவர் வானவர்
- அசுரர்கள் தேவர்கள், இந்திராதிகள் - இந்திரன் முதலானவர்கள்,
யாவர்க்கும் - எவர்களாலும், எய்திட வந்திரா ஒரு வேள்வி வளர்ப்பதை
- செய்து முடிக்க ஒருவர்க்கும் தோன்றாத ஒப்பற்ற யாகம் செய்தலைக்
குறித்து, நொந்து இரா முற்ற நுண்ணிதின் எண்ணினோம் - வருந்தி இரவு
முழுதும் நுட்பமாக ஆலோசித்தோம்.
முனிவர்கள்
மன்னவனை நோக்கிச் சொல்வது இது. சூரியன்
சந்திரன் முதலான தேவர்களாலும் செய்து முடிக்கப்படாத ஒரு வேள்வி
செய்யக்குறித்தோம் என்றனர்.
(14)
|
வேள்விக்குப்
பொருள் மிகுதி வேண்டுமெனக் கேட்டல் |
473. |
வேந்த
அப்பெரு வேள்விக் கிரும்பொருள்
ஈந்தி டற்குரி யாரெவர் என்றியாம்
ஆய்ந்த னம்உனை அன்றிமற் றில்லெனாப்
போந்த னம்என மன்னன் புகலுவான். |
(இ - ள்.)
வேந்த - அரசனே!. அப்பெரு வேள்விக்கு - அந்தப்
பெரிய வேள்விக்கு, இரும் பொருள் ஈந்திடற்கு உரியார் - பெரும்
பொருள் கொடுப்பதற்கு உரியவர், எவர் என்று யாம் ஆய்ந்தனம் -
யாவரென்று நாம் ஆராய்ந்து பார்த்தோம், உனை அன்றி மற்று இல்
எனாப்போந்தனம் என - உன்னைத் தவிரவேறு எவரும் இல்லையென்று
உன்னிடம் வந்தோம் என்று கூற, மன்னன் புகலுவான் - அதற்கு
அரிச்சந்திரன் சொல்லுவான்.
எனா: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
'உயர்ந்த
வேள்விக்குப் பொருள் மிகுதிவேண்டும்; அப்பொருள் வழங்கத்தக்க
மன்னவர் உன்னையன்றி வேறிலர். ஆதலால் உன்பால் வந்தோம்'
என்றனர். அப்போது மன்னன் புகல்கிறான்.
(15)
|
அரசன்
'பொருள் வழங்குவேன்' என்றல் |
474. |
பரவும்
இப்பொருள் பற்றவும் மிக்கது
தரல்எ னக்கியல் பென்றரிச் சந்திரன்
திரவி யங்கொடு வம்எனச் செப்பலும்
பிரம சாரிகள் மீளவும் பேசுவார். |
(இ
- ள்.) பரவும் இப்பொருள் பற்றவும் மிக்கது - நல்வழிக்குப்
பயன்படுதலால் துதிக்கத்தக்க இப்பொருள் பெற்றுக்கொள்வதற்கும்
|