உம்மை:
எண்ணும்மை: நெந்நெல் வெண்ணெல்: உம்மைத் தொகை;
வயலும் பொழிலும் பொய்கையும் கடந்து வனஞ்சென்று பன்னசாலையை
அடைந்தனர் என்பது. பழுவம் - காடு. பன்னசாலை - இலைவேய்ந்த
குடில்.
(18)
|
அரிச்சந்திரன்
கருத்தினைக் கோசிகற்கு விளம்புதல் |
477. |
அன்ன
காலை அருந்தவக் கௌசிகன்
றன்ன டித்துணை தாழ்ந்தரிச் சந்திரன்
பொன்ன ளிக்கப் பொருந்தினன் என்றவர்
சொன்ன பின்னர்த்தம் சூழலிற் போயினார். |
(இ - ள்.)
அன்னகாலை - அப்பொழுது, அருந்தவக் கௌசிகன்
தன் அடித்துணை தாழ்ந்து - அரிய தவம்புரிகின்ற விசுவாமித்திரனுடைய
இரண்டு திருவடிகளைப் பணிந்து, அரிச்சந்திரன் பொன் அளிக்கப்
பொருந்தினன் என்று - அரிச்சந்திரன் பொருள் கொடுப்பதற்கு
இசைந்தான் என்று, அவர் சொன்னபின்னர் தம் சூழலிற் போயினார் -
அம் முனிவர்கள் சொன்னபிறகு தங்கள் இடத்திற்குச் சென்றார்கள்.
கௌசிகன் - தன் : பகுதிப்பொருள் விகுதி: பின்னர்
- அர் :
பகுதிப்பொருள் விகுதி; சூழலில் : உருபுமயக்கம், கோசிகனிடம் பணிந்து
அரிச்சந்திரன் செயலைக் கூறினர். பின்னர் அம் முனிவர்
அவரவரிருக்கைக்குச் சென்றனர் என்பது.
(19)
|
அரிச்சந்திரனைக்
காணக் கோசிகன் செல்லுதல் |
478. |
அடிவ
ணங்கி அருந்தவர் போனபின்
கடிது சிற்சில திங்கள் கழித்துநீள்
வடிசு டர்ப்படை மன்னனைக் காணிய
கொடிய பாதகக் கோசிகன் தோன்றினான். |
(இ
- ள்.) அருந்தவர் அடி வணங்கி போனபின் - செயற்கருந்
தவம்புரிந்த முனிவர்கள் தன்னுடைய திருவடிகளை வணங்கிப் போனபிறகு,
கடிது - விரைவிலே, சிலசில திங்கள் கழித்து - சிற்சில மாதங்கள் கழிந்த
பிறகு, கொடிய பாதகக் கோசிகன் - கொடுமையான பாவச்செயல்களைச்
செய்யத் துணிந்த கௌசிகன், வடி சுடர்ப்படை மன்னனைக் காணிய
தோன்றினான் - வடித்தெடுக்கப்பட்ட ஒளி பெருந்திய
வேற்படையையுடைய அரிச்சந்திரனைக் காணும் பொருட்டு வந்தான்.
அருந்தவர்:
பண்புத்தொகை; சில+சில=சிற்சில. காணிய : செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம், பின் அரிச்சந்திரனைப் பல
துன்பத்துக்குள்ளாக்குஞ் செயல்புரிவதால் கோசிகனை 'கொடிய பாதகக்
கோசிகன்' என்றார்.
(20)
|