வாவியுங்
பொழிலும் கோசிகனைக் கண்டு நடுங்கியதாகக் கற்பித்தல்
479. |
கெடுக்க
வந்தனன் என்று கிலேசியா
விடுக்க ணுற்றளந் தென்றல் இயம்பிட
மடுக்க ளும்மலர் வாவியும் சோலையும்
நடுக்கம் எய்தி அலைந்தன நாடெலாம். |
(இ
- ள்.) இளந் தென்றல் - இளமையான தென்றற் காற்றானது,
கொடுக்க வந்தனன் என்று கிலேசியா இடுக்கன் உற்று - கோசிகமுனி
நாட்டினையும் மன்னனையும் கெடுக்க வந்துவிட்டான் என்று
மனக்கினேசத்துடன் துயருற்று, இயம்பிட - யாவர்க்குஞ் சொல்லுவது
போன்று சலசல ஓசையுடன் வீச, மடுக்களும் மலர் வாவியும் சோலையும்
- காற்று அசைத்தலினால் குளங்களும் தாமரைத் தடாகங்களும்
சோலைகளும் நடுக்குற்றசைந்து, நாடு எலாம் அலைந்தன - நாட்டிலுள்ள
உயிர்ப்பொருள் உயிரற்ற பொருள் இயங்கும் பொருள் இயங்காப் பொருள்
யாவும் நடுக்குற்று அசைந்தன.
கிலேசியா: செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; உம்மை:
எண்ணும்மை; நாடு : இடவாகுபெயர், எலாம் : தொகுத்தல்; தற்குறிப்பேற்ற
அணி, இயற்கையாகத் தென்றற்காற்றலைக்க அலையும் பொய்கை பொழில்,
பலவகையான உயிர்ப்பொருள்களைக் கோசிகன் வந்ததைத் தென்றல்
கூறக்கேட்டலைவதாகக் குறித்தலால்.
(21)
|
கோசிகன்
கருத்தினை மந்தியும் புள்ளும்
அறிந்தனவெனக் கற்பித்தல் |
480. |
கள்ள
நீதிக் கவுசிகன் எண்ணிய
துள்ள மார உணர்ந்திள மந்திகட்
டுள்ளி நீங்கின சோலைக டோறுமென்
புள்ளி ருந்தன பொய்கைக டோறுமே. |
(இ - ள்.)
கள்ள நீதிக் கவுசிகன் எண்ணியது - கள்ளமான
முறையைக் கோசிகன் கருதியதை, உள்ளம் ஆர உணர்ந்து - மனமார
உணர்ந்து, இள மந்திகள் சிறிய குரங்குகள், சோலைகள் தோறும் -
சோலைகளிலெல்லாம், துள்ளி நீங்கின - துள்ளிக் குதித்து அவற்றை
விட்டு நீங்கின, பொய்கைகள் தோறும் தடாகங்களில் எல்லாம், மென் புள்
இருந்தன - மென்மையான பறவைகள் அஞ்சி அடங்கி இருந்தன.
அஞ்சி அடங்கி என்பன அவாய்நிலையால் வந்தன. தற்குறிப்பேற்ற
அணி, இள மந்திகள் தாவிக் குதித்து ஓடியதையும், புட்கள்
அடங்கியிருந்ததையும் கோசிகன் கள்ளத்தைக் கண்டுதான் எனக் குறித்துக்
கூறியதால்.
(22)
|
மீன்,
வாழை, நெல் இவையும் கோசிகன் கருத்தறிந்தன
என்று கற்பித்தல் |
481. |
அலைகள்
சாய்த்தகல் வாவியின் மீனெலா
நிலைகள் சாய்த்தயல் நீங்கின வாழைகள்
குலைகள் சாய்த்தயல் குப்புற்று நின்றன
தலைகள் சாய்த்தன சாலியின் ஈட்டமே. |
|