மந்தர
அசலம் - மந்தராசலம் : தீர்க்கசந்தி; மாதவர் : உரிச்
சொற்றொடர் : நீ இங்கு வந்ததற்குக் காரணம் எந்த மாதவமோ அறியேன்
என்று முகமனுரை கூறிப் பின் வந்த காரணம் வினவினான் என்க.
(27)
|
கௌசிகன்
கூறலும் காவலன் வினவலும் |
486. |
காவல்
மன்ன கடிமறை வேள்விக்கென்
ஏவல் மாக்கட் கிசைத்த பெரும்பொருள்
தாஎ னச்சொலக் கேட்டரிச் சந்திரன்
ஈவ லெத்துணை வேண்டுமென் றேத்தினான். |
(இ - ள்.)
காவல் மன்ன - உலகத்தைக் காக்கின்ற அரசனே!, கடி
மறை வேள்விக்கு - புதிதாகிய வேதங்களிற் கூறப்பட்ட வேள்விக்கு, என்
ஏவல் மாக்கட்கு இசைத்த பெரும் பொருள் - எனது ஏவலால் வந்த
முனிவர்களுக்கு நீ கொடுப்பதாக இசைத்த பெரும் பொருளை, தா எனச்
சொல் - இப்பொழுது என்னிடம் கொடு எனச் சொல்ல, அரிச்சந்திரன்
கேட்டு - அரிச்சந்திரன் கேட்டு, ஈவல் எத்துணை வேண்டும் என்று
ஏத்தினான் - இப்பொழுதே கொடுக்கிறேன் எவ்வளவு வேண்டும் என்று
வணங்கிக் கேட்டான்.
கடி மறை : உரிச்சொற்றொடர்; ஈவல்; தன்மை ஒருமை
எதிர்கால
வினைமுற்று: கடி : புதுமை. மறைநூல்களிற் கூறப்பட்ட புதிய வேள்வி
என்பது 'கடி மறை வேள்வி' என்பதன் பொருள் எனக் காண்க.
(28)
|
வேள்விக்குப்
பொருள் வேண்டுமளவு கூறுதல் |
487. |
மான
வன்சொல மாமுனி நோக்கியே
யானை மேனின் றெறிந்த கவண்சிலை
போன தூரம் பொருள்குவிப் பாயெனின்
மோன வேள்வி முடித்திட லாமென்றார். |
(இ
- ள்.) மானவன் சொல - பெருமைபொருந்திய அரிச்சந்திரன்
அவ்வாறு சொல்ல, மா முனி நோக்கி - அருந்தவமுனி மன்னனைப்
பார்த்து, யானை மேல் நின்று - யானையின்மேல் ஏறி நின்றுகொண்டு,
எறிந்த கவண் சிலை - வானோக்கி எறிந்த கவண் கல், போன தூரம்
பொருள் - எவ்வளவு உயரம் போகுமோ அவ்வளவு உயரமான
பொருட்குவியலை, குவிப்பாய் எனின் - குவிப்பாயானால், மோன வேள்வி
முடித்திடலாம் என்றார் மௌனமாயிருந்து செய்யும் அந்த யாகத்தை
முடிக்கலாம் என்று கூறினார்.
மானவன்:
பண்புப்பெயர். சிலை - கல், மோனம் - மனம் அடக்கி
வாயடக்கியிருக்கும் நிலை.
(29)
|
வேண்டிய
பொரு ளீய வேந்தன் உடன்படல் |
488. |
இறைவன்
இவ்வகை ஈகுவன் யானெனா
அறைதி றந்திவண் ஆனையைத் தம்மெனக்
குறைவில் வாதுவ ரோடிக் கொணர்ந்திடப்
பிறையெ யிற்றுப் பெருங்களி றுற்றதே. |
(இ - ள்.)
இறைவன் - அரிச்சந்திரன், யான் இவ்வகை ஈகுவன்
எனா - நான் இவ்வாறே உனக்குப் பொருள் தருவேன் என்று, அறைதிறந்து
- நிதி அறையைத் திறந்து, இவண் ஆனையைத் தம் என - இங்கே
யானையைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிட, குறைவு இல்
வாதுவர் ஓடிக் கொணர்ந்திட - குறைவில்லாத யானைப்பாகர் ஓடிப்போய்க்
கொண்டுவர, பிறை எயிற்றுப் பெருங் களிறு உற்றது - பிறைபோன்ற
வளைவும் கூர்மையும் வெண்மையும் உடைய தந்தங்களையுடைய பெரிய
யானையும் வந்தது.
ஈகுவன் : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று: எனா
: செய்யா
என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தம்மின் என்பது குறைந்து 'தம்' என
நின்றது. இது முன்னிலையேவற்பன்மை வினைமுற்று. பிறை எயிறு :
உவமைத்தொகை, தாரும் என்பது தம் என மருவியது.
(30)
|
'வேள்வி
தொடங்கும் நாளில் வழங்குக' என்றல் |
489. |
ஒத்த
தேயமை யும்மென தொண்பொருள்
வைத்த னன்நின் னிடத்தடை மன்னயான்
சுத்த வேள்வி தொடங்கிடு நாளெனக்
குய்த்தி நீயென் றுரைத்தவன் ஏகினான். |
(இ
- ள்.) மன்ன - அரசனே!. ஒத்ததே அமையும் - நீ
சம்மதித்ததே போதும், எனது ஒண் பொருள் நின்னிடத்து அடை - நீ
எனது வேள்விக்குக் கொடுக்க இசைந்ததால் எனக்குச் சொந்தமாகிய சிறந்த
பொருளை உன்னிடமே அடைக்கலமாக வைத்தேன். யான் சுத்த வேள்வி
தொடங்கிடு நாள் - நான் பரிசுத்தமான யாகத்தைத் தொடங்குகின்ற
நாளில், நீ எனக்கு உய்த்தி என்று உரைத்து - நீ என்னிடம் சேர்த்து
விடுவாயாக என்று கூறி, முனிவன் ஏகினான் - கோசிகன் சென்றான்.
வேள்வியாகிய
நற்றொழிலுக்குப் பயன்படுதலின் 'ஒண் பொருள்'
ஆயிற்று. அடை : முதனிலைத் தொழிற்பெயர்; உய்த்தி : முன்னிலை
ஒருமை ஏவல் வினைமுற்று உய் : பகுதி; த் : சந்தி; த் : எழுத்துப் பேறு
இ: முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி வேள்வி தொடங்கும் காலம்
வரை நின் பால் அடைக்கலமாக என் பொருளை வைத்தேன்; அதனைக்
காத்துப் பின்னர்த் தருக என்பது குறிப்பு.
(31)
விலங்கு
பறவைகளை விசுவாமித்திரன் வருக என நினைத்தல்
490. |
அருவ
னம்கடந் தாச்சிர மம்புகுந்
தொருத ருத்தட நீழல் உறைந்துபார்
மிருகம் புள்ளினம் யாவும் விரைந்திவண்
வருக என்று மனந்தனில் உன்னினான். |
|