(இ
- ள்.) அரு வனம் கடந்து - கடத்தற்கு அருமையான
காட்டைக் கடந்து, ஆச்சிரமம் புகுந்து - தன்னுடைய ஆசிரமத்துக்குள்ளே
சென்று, ஒரு தருத் தட நீழல் உறைந்து - ஒரு பெரிய மர நிழலில் தங்கி,
பார் - உலகிலுள்ள, மிருகம் புள்ளினம் யாவும் இவண் விரைந்து வருக
என்று - மிருகங்கள் பறவைகள் எல்லாம் இவ்விடத்திற்கு விரைவாக வருக
என்று, மனம், தனில் உன்னினான் - மனத்தில் கருதினான்.
மனந்தனில் - மனம் + தன் + இல் - தன் : சாரியை, இல் :
ஏழனுருபு. யாவும் : முற்றும்மை; தடநீழல்: உரிச்சொற்றொடர். நீழல்:
நீட்டல் விகாரம்.
(32)
|
விலங்குகள்
விரைந்து வருதல் |
491. |
அலங்கல்
அம்சடை மாமுனி அன்பிலான்
நலங்கு லைந்து நினைத்தவந் நாடனிற்
கலங்கி வாய்களிற் கௌவிய தீனவிட்டு
விலங்கெ லாமுன் விரைந்துவந் துற்றவே. |
(இ - ள்.)
அலங்கல் - அசைகின்ற, அம்சடை - அழகிய
சடையையுடைய, மா முனி - சிறந்த விசுவாமித்திர முனிவர், அன்பு
இலான் - இரக்கம் இல்லாதவனாய், நலம் குலைந்து நினைத்த அந்நாள்
தனில் - நன்மை நீங்கி நினைத்த அந்த நாளில், விலங்கு எலாம் கலங்கி
- மிருகங்கள் எல்லாம் கலங்கி, வாய்களில் கௌவிய தீனவிட்டு -
வாய்களில் கவ்விய இரையை விட்டு விட்டு, முன் விரைந்து வந்து உற்ற
- முனிவர் முன் விரைவில் வந்து பொருந்தின.
ஏகாரம் :
ஈற்றசை: அன்பிலான் : முற்றெச்சம்; எலாம் :
தொகுத்தல் முனிவர் நினைத்தபொழுதே வாயில் கவ்விய இரையையும்
விட்டு அஞ்சி நடுங்கி வந்தன என்றார். தவமுனிவர் ஆதலாலும்
கோபத்தாற் கொடியவராதலாலும் அவ்வாறு விரைந்து வந்தன எனக்
கொள்க.
(33)
|
சிங்கம்
வருதல் |
492. |
வளையும்
வாலெடுத் தோச்சி வருகனல்
விளையும் கண்கள் விழுவன போலுற
உளைவி ரித்து விதிர்த்துத றிப்பெரும்
கிளையி னோடுற்ற கேசரி கோடியே. |
(இ
- ள்.) வளையும் வால் எடுத்து ஓச்சி - வளைவான வாலை
உயர்த்தி வீசிக்கொண்டு, வருகனல் விளையும் கண்கள் - ஊழிக்காலத் தீ
உமிழ்கின்ற கண்கள், விழுவனபோல் உற - விழுவனபோல் தீப் பொறி
சிதற, உளை விரித்து - பிடரி மயிர்களை விரித்து, விதிர்த்து உதறி -
சிலிர்த்து உதறிக்கொண்டு, பெருங்கிளையினோடு உற்ற கேசரி -
பெருஞ்சுற்றமொடு பொருந்திய சிங்கம், கோடி - கோடிக்கணக்காகும்.
கோடி
என்பது எண்ணிறந்த சிங்கங்கள் என்ற பொருளைத் தந்தது.
விலங்குகட்கு அரசு சிங்கம் ஆதலால் அவ் விலங்கின் வருகை முதலிற்
கூறப்பட்டது.
(34)
|