(இ
- ள்.) கண்ணெலாம் கனல் மண்ட - கண்களெல்லாம்
தீப்போல் எரிய, கடு விடம் மண் எலாம் குதிகொள்ள - கடுமையான
நஞ்சு பூவுலகு முழுதும் பரவ, மணிச் சுடர் விண் ஏலாம் வெயில் வீசிட
- தலையிலுள்ள நாகரத்தினங்களின் ஒளி வானுலகு முழுதும் ஒளி வீச,
எண்ணில் அரவு - கணக்கற்ற பாம்புகள், வாய் பிளந்து - வாயைப்
பிளந்துகொண்டு, எங்கும் வந்து ஈண்டின - எல்லா இடங்களிலும் வந்து
கூடின.
கண்
எலாம்: ஒருமை பன்மை மயக்கம்; அரவு: பால்பகா
அஃறிணைப்பெயர். எண்ண முடியாத பாம்புக்கூட்டங்கள் வந்து
சேர்ந்தன என்க.
(37)
|
மான்
முதலிய விலங்கினங்கள் வரவு |
496. |
மான
ழுங்குபுல் வாய்மரை வாங்கலை
ஏன நானம் எலிபெருச் சாளிஎய்
கான மேதி கரடிசெந் நாய்நரி
வான ரம்கட மாஇவை வந்தவே.
|
(இ
- ள்.) மான் அழுங்கு புல்வாய் மறை வாம்கலை ஏனம் நானம்
எலி பெருச்சாளி எய் கானமேதி கரடி செந்நாய் நரி வானரம் கடமா -
மான்கள் அழுங்குகள் மரைகள் தாவுகின்ற கலைமான்கள் பன்றி
புழுகுப்பூனைகள் எலிகள் பெருச்சாளிகள் முள்ளம் பன்றிகள்
காட்டெருமைகள் கரடிகள் செந்நாய்கள் நரிகள் குரங்குகள் காட்டு
மிருகங்கள், இவை வந்த - ஆகிய இவை வந்தன.
மரை, அழுங்கு : ஒருவகை விலங்குகள், வாவும் + கலை = வாம்
கலை - வாங்கலை என்று நின்றது. வாவும் என்ற பெயரெச்சம் ஈற்றயல்
உயிர் மெய் கெட்டு நின்றதாகக் கொள்க. மான் முதற் கடமா இறுதியாகிய
விலங்கினங்கள் எல்லாம் வந்தன என்க.
(38)
|
பலவகைப்
பறவைகள் வரவு |
497. |
தோகை பூவை
சுகங்குக்கில் சக்கர
வாக நாரை மடஅனம் கோகிலம்
காகம் அன்றில் சிவல்கவு தாரிபூழ்
வேக மோடு பறந்து விரைந்தவே. |
(இ - ள்.)
தோகை - மயில்கள், பூவை - நாகணவாய்ப்புட்கள்,
சுகம் - கிளிகள், குக்கில் - செம்போத்துக்கள், சக்கரவாகம் - சக்கரவாகப்
பறவைகள் நாரை - நாரைகள், மட அனம் - மடமை பொருந்திய
அன்னப்பறவைகள், கோகிலம் - குயில்கள், காகம் - காக்கைகள், அன்றில்
அன்றிற் பறவைகள், சிவல் - சிவல்கள், கவுதாரி - கவுதாரிகள், பூழ் -
காடைகள், வேகமோடு பறந்து விரைந்த - வேகமாகப் பறந்து விரைவில்
வந்து சேர்ந்தன.
ஏகாரம் :
ஈற்றசை; அனம் : தொகுத்தல்; மட அனம் :
பண்புத்தொகை. தோகை முதல் பூழ் ஈறாகச் சொல்லப்பட்ட
பறவைகளெல்லாம் விரைந்து பறந்து வந்தன என்க.
(39)
|