|
வந்தவையெல்லாம்
முனிவரை வணங்குதல் |
498. |
முந்தி
வந்த முதிர்சின மாக்களும்
வெந்தி றற்கொடு வேகத்த நாகமும்
பந்தி பந்தி பறவைத் திரள்களும்
வந்து வந்து முனியை வணங்கின. |
(இ
- ள்.) முந்தி வந்த முதிர்சின மாக்களும் - முன்னே வந்த
மிகுந்த சீற்றங்கொண்ட விலங்குகளும், வெம் திறல் கொடு வேகத்த
நாகமும் - வெம்மையான திறலும் கொடுமையான வேகமும் உடைய
பாம்புகளும், பந்தி பந்தி பறவைத் திரள்களும் - கூட்டம் கூட்டமாய்
வந்த பறவைக் கூட்டங்களும், வந்து வந்து முனியை வணங்கின - மேலும்
மேலும் வந்து விசுவாமித்திர முனியை வணங்கின.
முதிர்சினம்:
வினைத்தொகை; பந்தி பந்தி, வந்து வந்து: அடுக்குத்
தொடர் இது மிகுதிபற்றி வந்த அடுக்கு. முந்தி வந்தவை முந்தியும் பிந்தி
வந்தவை பிந்தியும் ஆகச் சென்று வணங்கின எனக்கொள்க.
(40)
|
வரவழைத்த
காரணம் வினாவுதல் |
499. |
தழைத்த
புல்லும் தழையும் கனிகளும்
விழைத்த ருந்தி வெருண்டு வெகுண்டுகோள்
இழைத்து நீள்வனம் வாழ்கின்ற எம்மைநீ
அழைத்த தீதென் றருள்செய வேண்டுமே. |
(இ - ள்.)
தழைத்த புல்லும் - காட்டில் தழைக்கிருக்கிற புல்லையும்,
தழையும் - தழைகளையும் கனிகளும் - பழங்களையும், விழைத்து அருந்தி
- விருப்பத்தோடு தின்று, வெருண்டு வெகுண்ட கோள் இழைத்து -
எங்களிலும் வலியவற்றிற்குப் பயந்து மெலியவற்றைச் சினந்து
அடித்துச்சென்று தின்னும் கொள்கைகளைக் செய்து நீள்வனம் வாழ்கின்ற
எம்மை - பெரிய காடுகளில் வாழ்கின்ற எங்களை, நீ அழைத்தது ஈது
என்று அருள் செய்வேண்டும் - நீர் கூப்பிட்ட காரணம் இஃது என்று
சொல்லியருளவேண்டும் (என்றன).
ஏகாரம் :
ஈற்றசை; அழைத்தது: தொழிற்பெயர்: அழைத்த
அச்செயல் எனக் கொண்டு பெயரெச்சத் தகம் தொக்கதாகவும்
கொள்ளலாம். ஈது என நீண்டது, ஈது - இன்ன காரணம், ஈது எனக்
கூறவேண்டும் என்று கூற அடுத்த கவியிலுள்ளதை வருவித்து
முடித்துக்கொள்க.
(41)
|
முனிவர்
கூறுவது |
500. |
என்று
கூற முனிவன் இயம்புவான்
குன்று மேவு விலங்கின் குலத்துளீர்
ஒன்று கூறுவ துண்டினி யானுமக்
கின்று நீர்செய் பணிஎன் றியம்புவான். |
|